TamilSaaga

KGF vs Beast இல்ல.. KGF and Beast.. – சிங்கப்பூர் vs வேலைவாய்ப்பு இல்ல… சிங்கப்பூர் and வேலைவாய்ப்பு – இதுதான் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் Beast திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றிபெற்ற KGF படத்தின் இரண்டாம் பாகம் April 14ம் தேதி வெளியாகின்றது. ஆகவே Beast vs KGF என்ற மனநிலையில் ரசிகர்கள் இருக்கும் இந்த நேரத்தில் நேற்று KGF இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது. இதுகுறித்து பேசிய யஷ் “இது தேர்தல் இல்லை, ஒரு ஓட்டு தான் இருக்கிறது, அதை யாருக்கு போடுவதென்று குழப்பிக்கொள்ள” இருதரப்பு ரசிகர்களும் இருவருடைய படத்தையும் பார்க்கலாம் ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் செல்ல “Entry Approval” தேவையா? இல்லையா?.. உண்மை புரியாமல் முன்பதிவு செய்து ஏர்போர்ட்டில் குவிந்த பயணிகள் – பணம் திரும்ப கிடைக்காததால் ஆத்திரம்

இறுதியில் யஷ் தனது கருத்தை இது Beast Vs KGF அல்ல மாறாக Beast and KGF என்று கூறி முடித்தார். சரி இப்போ இத ஏன் தமிழ் சாகா நீங்க சொல்றிங்க என்று கேட்டால், நமது சிங்கப்பூர் மற்றும் இங்கு வேலைக்கு வர காத்திருக்கும் தமிழர்கள் உள்பட பலரின் நிலை இப்படி தான் உள்ளது, அது தான் சிங்கப்பூர் vs வேலைவாய்ப்பு.

இந்த தொற்று காலத்தில் தான் எவ்வளவு பாதிப்பு, சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்யமுடியவில்லை என்ற கவலை ஒருபுறம் என்றால் ஏற்கனவே இங்கு வேலையில் இருந்தவர்கள் கூட சொந்த நாட்டிற்க்கு திரும்ப வேண்டிய அவலநிலை. இன்றளவும் ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளில் இருந்து மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் முடங்கிப்போயுள்ளனர். எப்போது என்னால் மீண்டும் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல Apply செய்யமுடியும், என் தகுதிக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

உண்மையை சொன்னால் தற்போது அதற்கான காலம் கணிந்து வருகின்றது, சிங்கப்பூர் vs வேலைவாய்ப்பு என்பது தற்போது சிங்கப்பூர் and வேலைவாய்ப்பு என்று மாறி வருகின்றது. எல்லைகள் தொடர்ந்து தளர்வு பெறுகின்றன. OCBC, Dyson போன்ற பல முன்னணி நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் தொழிலாளர்களை பணியமர்த்த துவங்கியுள்ளனர். நமது தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்திலும் தொடர்ச்சியாக சிங்கப்பூர் வேலைவாய்ப்பு குறித்து தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றோம்.

2020ம் ஆண்டு இறுதியில் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வெளிநாட்டு மனிதவள குறைவு ஏற்பட்டுள்ளது என்று பல சிங்கப்பூர் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது என்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரை சேர்ந்த Manpower Group என்று நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் கடந்த 11 ஆண்டுகளில் சிங்கப்பூரில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு (குறிப்பாக வெளிநாட்டவருக்கான வேலைவாய்ப்பு) அதிக அளவில் உயர்வுள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” : மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் “சலுகை” – MOM மற்றும் MND கூட்டறிக்கை

ஆகவே சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட பிற வெளிநாட்டவருக்கான வேலைவாய்ப்பு என்பது மீண்டும் துவங்கும் நாள் வந்துவிட்டது. எனவே முறையான தயாரிப்புடன் தொழிலாளர்கள் காத்திருந்தால் நிச்சயம் விரைவில் சிங்கப்பூருக்குள் உங்களால் ஒரு நல்ல வேலைக்கு நுழையமுடியும் என்பதில் மாற்றுகருத்தில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts