TamilSaaga

சிங்கப்பூரில் “ChatGPT” உதவியுடன் TOTO குலுக்கலில் வென்ற அதிர்ஷ்டசாலி.. லக்கி நம்பரை துல்லியமாக தேர்வு செய்த “அதிசயம்”!

இந்த செய்தியை படிப்பவர்களின் எத்தனை பேர் “ChatGPT” பற்றி கேள்விப்பட்டுள்ளனர்.. அதனை எத்தனை பேர் பயன்படுத்தி பார்த்துள்ளனர் என்று தெரியாது.. ஆனால், இன்றைய தேதிக்கு உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த ChatGPT-ஐ வைத்து காலையில் பல் துலக்குவதில் இருந்து, இரவு படுக்கும் வரை பல விதமான “Prompts” மூலம் ஏகப்பட்ட விஷயங்களை சோதித்துப் பார்த்து வருகின்றனர்.

சரி.. ChatGPT என்றால் என்ன?

அமெரிக்காவில் இயங்கி வரும் “OpenAI” எனும் செயற்கை நுண்ணறிவுத் திறன் நிறுவனமே இந்த ChatGPT-ஐ உலகுக்கு அறிமுகம் செய்தது. இதனிடம், நீங்கள் விதிமுறைக்குட்பட்டு என்ன கேட்டாலும் கொடுக்கும். அதாவது, நீங்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்லும்.

நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு போக முயற்சி செய்கிறேன். எனக்கு அதற்கு ஏற்ப ஒரு Resume தயார் செய்து கொடு என்றால், ஒரு நிமிடத்திற்குள் மிக மிக High Professional-ல் உங்களுக்கு ஒரு Resume தயார் செய்து கொடுத்துவிடும்.

நான், கல்லூரியில் ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறேன். என்னுடைய தலைப்பில் எனக்கு 500 வார்த்தைகளுக்கு ஒரு கட்டுரை எழுதிக் கொடு என்றால் கொடுத்துவிடும்.

நான் மேலே சொன்னது என்னால், ChatGPT-யிடம் கேட்கப்படும் LKG லெவல் கேள்விகளே. லண்டனில் உள்ள Oxford யூனிவெர்சிட்டியின் செமஸ்டர் தேர்வை எழுதும் அளவுக்கு இதனை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க – 4 லட்சம் கடன் வாங்கி S-Passல் சிங்கப்பூர் வருபவர்களின் நிலை இதுதான்.. இவ்வளவு தான் சம்பளம்! – உண்மையை புரிஞ்சிகிட்டு ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுங்க!

இன்னும் சொல்லப்போனால், Java Program கூட இது எழுதிவிடும். அந்த அளவுக்கு, இன்டர்நெட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரித்து, நீங்கள் கேட்கும் Prompt (கேள்விகளை) பொறுத்து, அது உங்களுக்கு தேவையான பதிலை கொடுக்கும்.

அந்த வகையில், நமது சிங்கப்பூரைச் சேர்ந்த Aaron Tan என்ற நபர், ChatGPT மூலம், TOTO லாட்டரி குலுக்களை வென்று அசத்தியுள்ளார். ஆம்! அவர் லாட்டரி வாங்கும் போது, ChatGPT-இடம் 1-ல் இருந்து 49-வரையிலான எண்களில் 7 எண்களை தெரிவிக்குமாறு Prompt கொடுக்க, 12, 21, 28, 36, 42, 44, 47 என்ற எண்களை ChatGPT கொடுத்திருக்கிறது.

இந்த எண்களை வைத்து Aaron TOTO லாட்டரி வாங்க, சமீபத்தில் நடந்த குலுக்கலில் 16, 21, 25, 28, 37, 44 ஆகியவை வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்டது. இதில், 21, 28, 44 ஆகிய மூன்று எண்கள் Aaron வாங்கிய லாட்டரியில் இருந்ததால் அவருக்கு 50 டாலர்கள் பரிசாக கிடைத்தது.

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வெறும் 50 டாலர் தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், இந்த எண்களை தேர்வு செய்தது ஒரு மனித மூளை அல்ல என்பதை மறக்க வேண்டாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts