TamilSaaga

“நான் அவளை பாலியல் பலாத்காரம் செய்தேன்” : வீடியோவில் பேசிய நபர் கைது – சாங்கி சிறை வளாகத்தில் ரிமாண்ட்

சிங்கப்பூரில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடியோவில் ஒப்புக்கொண்ட வாலிபர் ஒருவர், சாங்கி சிறை வளாக மருத்துவ மையத்தில் மனநலக் கண்காணிப்பிற்காக ரிமாண்ட் செய்யப்படுவார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய போலீஸ் பிரிவில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ள அந்த 18 வயது இளைஞர், இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 2) வீடியோ இணைப்பு மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையும் படியுங்கள் : மயிலால் தாக்கப்பட்ட சிறுமி – “மகளை காக்க போராடிய தந்தை”

Gag உத்தரவு காரணமாக அவரது பெயரை வெளியிட முடியாது, மேலும் அவரது வழக்கு வரும் டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த சிங்கப்பூர் இளைஞன் மீது தலா ஒரு முறை பாலியல் ரீதியில் ஊடுருவியதாகவும், சட்டத்திற்குப் புறம்பான கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

கடந்த செப்டம்பர் 21ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கு இடையில், சிராங்கூன் சாலைக்கு அருகில் உள்ள டவுனர் ரோட்டில், பாதிக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமியின் அனுமதியின்றி, அந்த இளைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக கூறப்படுகிறது. முந்தைய அறிக்கையில் (நவம்பர் 22), காவல்துறை கூறியது : “சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்ட பிறகு பல புகார்கள் எங்களுக்கு கிடைத்தன”.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கி, அந்த நபரை (அடுத்த நாள்) கைது செய்தனர். மேலும் இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன” என்றும் போலீசார் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், குற்றவாளிகள் கடுமையாகவும் சட்டத்தின்படியும் கையாளப்படுவதை உறுதிசெய்ய எல்லா முயற்சியும் எடுப்போம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related posts