சிங்கப்பூரில் உள்ள toto மற்றும் 4D குலுக்கல் லாட்டரி குறித்து பல தகவல்களை நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனம் பல முறை கட்டுரைகளாக வெளியிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். TOTO வாரத்திற்கு 2 முறையும் 4D வாரத்திற்கு மூன்று முறையும் நடத்தப்படும் குலுக்கல் லாட்டரிகள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் மாதம் 1 முறை மட்டுமே சிங்கப்பூரில் நடைபெறும் Singapore SWEEP குறித்து நீங்கள் அறியாத பல தகவல்களை இந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ளது.
Singapore SWEEP மாதம் 1 முறை மட்டுமே அதுவும் மாதத்தின் முதல் புதன்கிழமை மட்டுமே நடத்தப்படும் ஒரு குலுக்கல் லாட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான கட்டணம் ஒரு லாட்டரி சீட்டுக்கு 3 வெள்ளி என்று விற்கப்பட்டு வருகின்றது.
பரிசு விவரங்களை முதலில் காணலாம்.
முதல் பரிசு – S$23,00,000 – ஒருவருக்கு மட்டுமே
இரண்டாம் பரிசு – S$5,00,000 – ஒருவருக்கு மட்டுமே
மூன்றாம் பரிசு – S$ 2,50,000 – ஒருவருக்கு மட்டுமே
ஜாக்பாட் பரிசு – S$ 10,000 – 10 பேருக்கு வழங்கப்படும்
லக்கி பரிசு – S$ 5,000 – 10 பேருக்கு வழங்கப்படும்
Gift பரிசு – S$ 3,000 – 30 பேருக்கு வழங்கப்படும்
Consolation பரிசு – S$ 2,000 – 30 பேருக்கு வழங்கப்படும்
Participation பரிசு – S$ 1,000 – 50 பேருக்கு வழங்கப்படும்
இது தவிர 2D (Digit) Delight என்ற 6 வெள்ளி சிறப்பு பரிசு சரியாக 3,15,000 பேருக்கு வழங்கப்படும் (வெளியாகும் குலுக்கல் முடிவுகளில் அவர்கள் அளிக்கும் 2 இலக்க எண் இருந்தாலே அவர்கள் இந்த பரிசு பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்)
குறிப்பு முதல் முதல் கடைசி பரிசுக்கான தனித்தனி 7 இலக்க எண்களை சிங்கப்பூர் sweep நிறுவனம் வெளியிடும். நிறுவனம் வெளியிடும் 7 இலக்க எண்ணும் பங்கேற்பாளர்கள் வைத்திருக்கும் 7 இலக்க எண்ணும் ஒத்துப்போனால் அவர்களுக்கு பரிசு நிச்சயம்.
கடந்த சிங்கப்பூர் Sweep முடிவுகள் உங்கள் பார்வைக்கு
சரி எப்படி டிக்கெட் வாங்குவது?
TOTO மற்றும் 4Dயை போல சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் pools நிலையங்களில் 3 வெள்ளி செலுத்தி சிங்கப்பூர் Sweep என்று கூறி இந்த குலுக்கலுக்கான சீட்டை பெறலாம். கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட 7 இலக்க எண் கொண்ட சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
அடுத்த sweep வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் புதன்கிழமை அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.