TamilSaaga

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்.. பால்குடம், ஆடி கூல் பூஜைக்கு Online புக்கிங் துவங்கியது – இவ்வாண்டு பாத ஊர்வலத்திற்கும் அனுமதி

உலக அளவில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று தான் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று பரவல் காரணமாக அனைத்து வைபவங்களையும் குறுகிய அளவில் நடத்திய கோவில் நிர்வாகம் இந்த ஆண்டு சற்று விமர்சையாக நடத்த முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஹிந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாகம் இணைந்து இந்த வருடம் திருவிழாவை மூன்று மாதங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கோவில் கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் 1 திங்கள்கிழமை அன்றும் அதே போல தீ மிதி திருவிழா அக்டோபர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற வருடம் போலவே இந்த நிகழ்வுகளுக்கு குறைந்த அளவிலான முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

திருவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் பகதர்கள் heb.org.sg என்ற இணையத்தில் சென்று பதிவு செய்துகொள்ளவேண்டும். தாலி பெருக்கு பூஜை (03.08.2022), ஸ்ரீ திரௌபதி அம்மன் பால்குடம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தற்போது முன்பதிவு நடந்து வருகின்றது.

மூன்று வெள்ளியில் S$23,00,000 ஜாக்பாட் பரிசு தரும் Singapore Sweep.. அடுத்த குலுக்கல் எப்போது நடக்கும்? – என்னென்ன பரிசுகள் காத்திருக்கிறது தெரியுமா?

மேலும் ஆடி கூல் பூஜை வருகின்றன ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகளும் தற்போது நடந்து வருகின்றது.

மேலும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் இடையிலான பாத ஊர்வலத்திற்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts