TamilSaaga

சிங்கப்பூரில் அருள்புரியும் வடபத்திரகாளி அம்மன்… கோயில் உருவான வரலாறு இதோ

சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் செராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் தான் “ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் திருக்கோயில்” “Sri Vadapathira Kaliyamman Temple”.

இந்த கோயிலில் மாரியம்மனின் வடிவாக காணப்படும் பத்திரகாளி என்ற பெண் தெய்வம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

காளி என்றால் தீமைகளை அழிப்பவள் என்று அர்த்தம். வட திசையில் இருந்து காவல் காப்பதாக நம்பப்படும் இந்த வடபத்திரகாளி கோயிலானது 1870ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

சாதாரண கூரையால் அமைக்கப்பட்ட இந்த கோயிலானது 1935ஆம் ஆண்டில் ஓடுகளால் அமைக்கப்பட்ட ஓர் கோயில் அமைப்பாக மாற்றப்பட்டது.

ரங்கசாமி முறியர், சாமியப்பன், முருகய்யன் மற்றும்
வைரப்ப தேவர் ஆகியோரது தலைமையில் இந்த கோயில் முதலில் கட்டப்பட்டது.

பிறகு 1905ல் சிங்கப்பூர் வந்த கோவிந்தசாமி செட்டியார் என்பவரால் இந்த கோயில் புணரமைக்கப்பட்டு கோயில் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டார்.

காளியே இங்கு பிரதான தெய்வமாகும் மையத்தில் தனி சன்னதியுடனும் காணப்படுகிறார். காளியின் இருபுறமும் விநாயகரும் முருகரும் அருள் புரிகிறார்கள். இந்த கோயிலில் பெரியாச்சியும் இடம்பெற்று வீற்றிருக்கிறார்.

இந்த கோயிலின் விமானமானது (பிரதான கோபுரம்) பல்வேறு தெய்வங்களின் சிற்பங்களோடு மிக அழகாய் காட்சியளிக்கிறது.

இந்த பகுதி மக்களின் காவலாக பலமாக இங்குள்ள வடபத்திரகாளி அம்மன் இருப்பதாக நம்பப்படுகிறது.

Related posts