TamilSaaga

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள் – காதல் எனும் பெயரில் கறக்கப்படும் “சம்பளம்” – காற்றில் பறக்கும் கெளரவம்

சிங்கப்பூரில் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது, இன்று பல வெளிநாட்டு தொழிலாளர்களின் கனவாக உள்ளது. அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இதற்கு முழுமுதற் காரணம். அதேசமயம், சிங்கப்பூரில் இருப்பது சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதும் மற்றொரு காரணம். அவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறது சிங்கப்பூர்.

இந்தியர்களும், சீனர்களும் அதிகம் வசிக்கும் நமது சிங்கப்பூரில் எப்போதும் இந்தியர்களுக்கு தனி பெரும்பான்மை உள்ளது. அதனால் தான், சிங்கப்பூர் “நம்ம ஊரு” எனும் எண்ணத்தை கொடுக்கிறது. அப்படி உள்ள நாட்டில், போலியான ஏஜென்சிகளிடம் சிக்கி பணத்தை இழக்காமல், நல்ல நிறுவனமாக வேலைக்கு சேர்ந்து, நல்ல முதலாளிக்கு கீழ் வேலைப் பார்ப்பது என்று இத்தனை தடைகளை கடந்து அவர்கள் வந்து இங்கு செட்டில் ஆவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது.

ஆனால், இவை அனைத்தும் கிடைத் துகை நிறைய சம்பளம் வாங்கி, அதை “காதல்” எனும் மோசமான மோசடி வழியில் சிக்கி இழக்கும் கொடுமையும் சிங்கப்பூரில் அரங்கேறி வருகிறது.

ஆம்! சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள், “காதல்” எனும் பெயரில் தங்கள் வருமானம், பேர் என அனைத்தையும் இழக்கிறார்கள். இந்தோனேசியாவில் இருந்து நிறைய பெண்கள் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். வீட்டு வேலை முதல் சாஃப்ட்வேர் வரை பல துறைகளில் இந்தோனேசிய பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில், மெஜாரிட்டி அதாவது 70 சதவிகித பெண்கள் வீட்டு வேலை, மசாஜ் சென்டரில் வேலை, பணக்கார முதியவர்களை பார்த்துக் கொள்வது என்று தான் சிங்கப்பூர் வருகிறார்கள்.

மேலும் படிக்க – பர்ஸைத் தொலைத்து கலங்கிய சிங்கப்பூர் நபர்.. உள்ளே 1188 டாலர் பணம்.. அப்படியே திருப்பி எடுத்து வந்து கொடுத்த “ஆண் தேவதை” – கிரேட்!

இந்தோனேசியாவின் மிகச் சாதாரண பொருளாதார நிலையே இவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு காரணம். அப்படி வந்து சிங்கப்பூரில் தனியாக போராடி, தங்கள் குடும்பத்தை தனி ஆளாக காப்பாற்றும் பணியை இந்தோனேசிய பெண்கள் செய்து வருகின்றனர். சிலரோ, தங்கள் குடும்பத்தையே இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வந்து, சிங்கப்பூரில் செட்டில் ஆகும் அளவுக்கு நன்கு உழைத்து முன்னேறுகின்றனர்.

அதேசமயம், மிக சில இந்தோனேசிய பெண்கள் தங்களிடம் ஏமாறும் ஆண்களிடம் முடிந்த அளவு பணத்தை கறக்கவும் செய்கின்றனர். இவர்களின் டார்கெட் வெளிநாட்டில் இருந்து பணிபுரியும் ஆண்கள் தான். குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள். ஆம்! சிங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சிலர், இந்தோனேசிய பெண்களின் காதல் எனும் வலையில் வீழ்கின்றனர். சொந்த ஊரில், பெண்களிடம் அதிகம் பேசாமல் இருந்தவர்கள், இங்கு சிங்கப்பூரில் தாமாக வந்து சிரித்து பேசும் அழகான இந்தோனேசிய பெண்களால் மிக எளிதில் வயப்பட்டு விடுகிறார்கள்.

இதன் விளைவு, எங்கு போய் முடிகிறது தெரியுமா? வாங்கும் சம்பளத்தை அப்படியே கொண்டு போய் கொடுத்து, இரண்டே நாட்களில் பணம் முழுவதையும் செலவு செய்து, மீதமுள்ள நாட்களை ஓட்ட, நண்பர்களிடம், கூட சக ஊழியர்களிடம் கடன் வாங்கி நாட்களை நகர்த்தும் கொடுமையில் போய் முடிகிறது. இப்படி, பல ஊழியர்கள் தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள்.

மேலும் படிக்க – லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் தமிழுக்கு ஏற்பட்ட “பரிதாப நிலை”.. தப்புத்தப்பாய் வார்த்தைகள் – மன்னிப்பு கேட்ட வேலையிடப் பாதுகாப்புச் சுகாதார மன்றம்

அதற்காக இந்தோனேசிய பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் யாராவது ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகுகிறார்கள். காதல் எனும் பெயரில் இந்த பழக்கம் தொடருகிறது. தினம் ஊர் சுற்றுவது, சாப்பிடுவது, இவர்களிடம் பணம் வாங்கி தங்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவது என்று முடிந்தவரை கோழி தாங்கும் வரை “தங்க முட்டையை” அறுவடை செய்து விடுகின்றனர்.

ஒருக்கட்டத்திற்கு மேல், அந்த குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியரால்… அதாவது தனது ஆண் நண்பரால் செலவு செய்ய முடியவில்லை என்பது தெரிந்த பிறகு “பாய்” சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட, சிங்கப்பூரின் புங்கோல் பகுதியில் உள்ள குடியிருப்பில் தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு வயதான நபரை குளிக்கவைக்கும் வீடியோவை அந்த நபரின் அனுமதி இல்லாமல் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய இந்தோனேசிய பணிப்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஏழு முறை அவரை குளிப்பாட்டிய போது அந்த பெண் தனது மொபைல்போனில் அந்த வீடியோவை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, இப்போது அது நிரூபிக்கப்பட, அப்பெண்ணுக்கு 17 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும், இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் சில இந்தோனேசிய பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமின்றி, இனி சிங்கப்பூர் வர நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது, இந்த போலி ‘காதல்’ வலையில் சிக்காமல் இருப்பதைப் பற்றித் தான். சிக்கினால், யாராலும் காப்பாற்ற முடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts