TamilSaaga

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை.. S$370 மில்லியன் நிகர லாபம் ஈட்டிய Singapore Airlines – இந்திய பயணிகளின் பங்கும் இதில் இருக்கிறது!

சிங்கப்பூரின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாத இடையிலான 3 மாத காலப்பகுதியில் சுமார் S$370 மில்லியன் நிகர லாபத்தைப் ஈட்டியுள்ளது. 2021ம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட அதே காலப்பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு S$409 மில்லியன் இழப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூர் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை விரிவுபடுத்தியதன் விளைவாக, 2021 டிசம்பர் இறுதி வரையிலான மூன்று மாதங்களில் SIA தனது முதல் காலாண்டு லாபத்தைப் பெற்றது.

“ஆண்டு இறுதி விடுமுறை பயணக் காலம் என்று வரும்போது, ​​பயணத் தேவை அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 வரை மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் என்பதால், எங்களுடைய வணிகமும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

2022ம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் 1.5 மில்லியன் பார்வையாளர்களைக் கண்டது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் நிலவிய நிலையை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம் என்றும் ஏர்லைன்ஸ் கூறியது. பெரும்பாலும் இந்தோனேசியா, இந்தியா மற்றும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த பயணிகளாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

இந்திய நகரங்களில் அதிகரிக்கும் தேவை.. தென்னிந்தியாவிற்கு சேவையை அதிகரிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு – முழு விவரம்

ஆகவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெற்ற இந்த அசுர வளர்ச்சிக்கு இந்திய பயணிகளும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கையில் இந்த 2022ல் 4 மில்லியன் முதல் 6 மில்லியன் பார்வையாளர்கள் சிங்கப்பூர் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த 2019ல் 19.12 மில்லியனும், 2020ல் 2.74 மில்லியன் அளவிற்கு பார்வையாளர்கள் இங்கு வந்துள்ளனர். சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பட்ஜெட் விமானங்களைக் கையாள்வதற்காக செப்டம்பர் 2022 இல் அதன் நான்காவது முனையத்தை மீண்டும் திறக்கும் என்பதால் வெளிநாட்டு பார்வையாளர்களின் வருகை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts