கடந்த 2021 இல் ஆங்கிலோ-சீன பள்ளியின் 15 வயது மாணவரான, ஜெத்ரோ புவா சின் யாங் (Jethro Puah Xin Yang), SAFRA யிஷுனில் நடைபெற்ற சாகசப் பயிற்சியின் போது கயிற்றில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
இது தொடர்பாக, அவரது பயிற்சியாளர் முகமது நூருல் ஹக்கிம் முகமது டின் (23) (Muhammad Nurul Hakim Mohamed Din) என்பவருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், பயிற்சியாளர் நூருல் ஹக்கிம், மாணவனின் பாதுகாப்புப் பட்டையைச் சரியாக பரிசோதிக்காமல் பயிற்சியில் ஈடுபடச்செய்து, மாணவருக்கு உயிர்ச்சேதம் விளைவித்துள்ளார்.
பயிற்சியின் போது பாதுகாப்புப் பட்டை சரியாக இறுக்கமாக போடப்படாமல் இருந்ததால், மாணவன் கயிற்றில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். பிப்ரவரி 3, 2021 அன்று, மாணவன் ஜெத்ரோவும் அவரது பள்ளித் தோழர்களும் யிஷுனில் உள்ள சஃப்ரா (SAFRA) அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் சென்டரில் குழுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பள்ளி ஏற்பாடு செய்திருந்த வெளிப்புற சாகச நடவடிக்கைகளில் பங்கேற்கச் சென்றதாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் இங் ஜுன் சோங் கூறியுள்ளார்.
வெளிப்புற சாகசப் பயிற்சி நிறுவனமான கேம்லாட்டில் ஊதியம் பெறாத தன்னார்வத் தொண்டராக இருந்துள்ள பயிற்சியாளர் ஹக்கீம், ஜெத்ரோ மற்றும் அவரது பள்ளித் தோழர்களுக்கு ஒரு பாதுகாப்பு விளக்கத்தை நடத்தியுள்ளார். அதில் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்புப் பட்டை எப்படி அணிய வேண்டும் மற்றும் பங்கேற்பாளர்கள் கீழே விழுந்தால் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார்.
ஹக்கீம் அன்றைய தினம் முதல் முறையாக மாணவர்களை பரிசோதித்து அனுப்புவராகவும் இருந்துள்ளார் . அனுப்புபவர் என்ற முறையில், மாணவர்களின் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்புப் பட்டை சரியாகக் கட்டப்பட்டு, அவர்கள் சாகசத்தில் பங்கேற்பதற்கு முன்பு சரி செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய இறுதிச் சோதனைகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் அவர், ஜெத்ரோ மற்றும் அவருக்கு முன் சென்ற மூன்று மாணவர்களுக்கு அவ்வாறு செய்யவில்லை. மாறாக, அனைத்து பாதுகாப்பு பட்டைகளும் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதி, பார்வையால் மட்டுமே கவனித்துள்ளார்.
மேலும் மாணவன் ஜெத்ரோ, சாகசத்திற்கு செல்வதற்கு முன், பதற்றமாக இருந்ததாகவும் , உயரங்களுக்கு பயப்படுவதாகவும் ஹக்கீமிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.ஆனால் ஹக்கீம், மாணவனை ஊக்கப்படுத்தி சாகசத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஜெத்ரோ, தனது முதல் சாகசப் பயிற்சியை எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்துள்ளார் மதியம் 1.30 மணியளவில், உலோக கேபிளில் பக்கவாட்டாக நடக்கும்போது, இரண்டாவது சாகசத்தில் அவர் நழுவினார்.
அப்போது ஒரு பயிற்றுவிப்பாளர், மாணவனுடைய பாதுகாப்புக் கோடு மற்றும் தடையின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, கால் கேபிளில் ஒரு காலை வைத்து அவரை மேலே இழுக்கச் சொன்னார். சிறுவன் அதை முயற்சி செய்தான் ஆனால் அவனால் மேலே இழுக்க முடியவில்லை.
சம்பவ இடத்திலிருந்த மற்றொரு பயிற்றுவிப்பாளர், ஜெத்ரோவின் பாதுகாப்புப் பட்டையில் இருந்த கால் சுழல்கள் தளர்வாக இருப்பதையும், அவைகள் அவரது தொடையிலிருந்து இடுப்பு வரை மேலே சென்றதையும் கண்டார்.
இரண்டு பயிற்றுனர்களும் அவரை அணுகி அவரை எழுப்ப முயன்றனர் ஆனால் தோல்வியடைந்தனர். அடிமட்ட ஆசிரியர் ஒருவர், மாணவனிடம் போராடுவதை நிறுத்தச் சொன்னபோது, அவர் மூச்சுத்திணறலாக உள்ளதாக பதிலளித்ததாவும் தெரிகிறது.
ஜெத்ரோவுக்கு சென்ற, இடையூறான பாதையில் சென்ற ஹக்கீம், சிறுவனை அவரது முன்கையைப் பிடித்துக் கொள்ளக் கூறியுள்ளார் . அப்போது, சிறுவனின் முகம் வெளிறிப்போயிருந்ததையும், விரல்கள் நீல நிறமாக மாறியிருப்பதையும் ஹக்கீம் பார்த்துள்ளார்.
சிறுவன் பீதியடைந்திருப்பதையும், காற்றுக்காக மூச்சு விடுவதையும் அவர் கவனித்துள்ளார். விழுந்து எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, ஜெத்ரோ தனது சுயநினைவை இழந்துள்ளார். ஜெத்ரோ விழுந்து அரை மணி நேரத்திற்கு மேலாக தரைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு நாடித் துடிப்பு இல்லாமல் மூச்சு நின்று விட்டிருந்தது.
அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் மற்றும் கழுத்தில் சுருக்கம் மற்றும் அதிர்ச்சிகரமான மூச்சுத் திணறலைத் தொடர்ந்து பல உறுப்பு செயலிழப்பால் அடுத்த நாள் இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேம்லாட் மற்றும் அதன் ஊழியர்களில் ஒருவரான லியூ ஃபூ லூங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களின் வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் உள்ளன.