TamilSaaga

“சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்ட் செயின்ட்” : குடியிருப்பின் தண்ணீர் பிரச்னையை விரைவாக தீர்த்த PUB

கடந்த மாதம் 30ம் தேதி “சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் செயின்ட் 74-ல் உள்ள தண்ணீர் பிரச்சினையை விரைவாகத் தீர்த்தத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”, என்று சிங்கப்பூர் நீர் மேலாண்மை நிறுவனமான PUB தங்களது முகநூல். இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரைப் பெற முடிந்தது என்றும் PUB தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர் பைகளை வழங்குவதற்கு PUB அதிகாரிகள் விரைவாக சென்றனர். அதே நேரத்தில் வெஸ்ட் கோஸ்ட் டவுன் கவுன்சில் (WCTC) மறுநாள் காலை அளிக்கவேண்டிய சாதாரண நீர் விநியோகத்தை மீட்டெடுக்க இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தினார்கள் எங்கள் தொழிலாளர்கள்” என்றும் PUB தெரிவித்தது.

தண்ணீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும், பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, வாட்டர்மெயின்கள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தண்ணீர் குழாய்ப் இடங்கள் ஆகியவற்றில் நீரின் தரப் பரிசோதனைகளையும் நாங்கள் நடத்தியுள்ளோம். குழாயில் உள்ள கனிமப் படிவுகள், திடீர் அழுத்தம் அதிகரிப்பு மற்றும் நீர் பாய்ச்சலின் திசை மாற்றத்தால் தான் தண்ணீரின் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளது.

WCTC உடன் இணைந்து, அவற்றின் தண்ணீர் தொட்டிகளுக்குள் செல்லும் வால்வுகளின் நிரலாக்கத்தை சரிசெய்ய நாங்கள் பணியாற்றியுள்ளோம். மேலும் மீண்டும் இந்த பிரச்சனை நிகழாமல் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts