சிங்கப்பூரின் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள தண்டவாளங்களில் விரிவாக்க பணிகள் நடைபெறுவதன் காரணமாக MRT சேவையின் நேரம் மாறுபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை சில நாட்களில் தேவையானது சுமார் 2 மணி நேரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதியில் பயணம் செய்யும் மக்கள் நேர குறைப்பினை கருத்தில் கொண்டு மாற்று பயணத்தினை பேருந்து மூலம் மேற்கொள்ளப்படும் ஆறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட தகவல்களில் சேவைகள் அக்டோபர் 15, 22,29 ஆகிய தேதிகளிலும் மற்றும் நவம்பர் 5ஆம் தேதியும் இரவு 10 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மூன்றாம் தேதியிலிருந்து ஜனவரி 28, 2024 வரை காலை நேர சேவையானது சற்று தாமதமாக 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளிக்கு முதல் நாளான சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தேவையானது இரவு 11 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே அப்பகுதியில் கூடுதலாக பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் பேருந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.