TamilSaaga

இதுவரை இல்லாத நீளத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம்… மாஸ்டர் பிளான் போடும் சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக நீளமான மேம்பாலத்தை அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதால், பாலக்கட்டுமான பணிகளுக்கான டெண்டர் தற்பொழுது விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக குத்தகைக்கு எடுக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள PIE சாலையில் கட்டப்படும் பாலத்தின் நீளம் 682 மீட்டர் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தினை பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுவார், வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்வோர் ஆகியோர் உபயோகப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள PIE சாலை மற்றும் காலாங் பூங்கா ஆகியவற்றை இணைக்கும் வண்ணம் 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதையானது திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சாலையின் மூலம் மக்கள் காலாங் பூங்கா இணைப்பு பாதையில் இருந்து ஜாலான் பகுதிக்கு உள்ள தாமான் பகுதியில் உள்ள மற்றொரு பூங்காவுக்கு செல்லும் வண்ணம் பாதை அமைக்கப்பட உள்ளது. பாலத்தை கட்டி முடிப்பதற்கு, போக்குவரத்து அனைத்தையும் சீரமைக்கும் பணி சற்று சிக்கலானது என்பதால் விரிவான ஆய்வுக்கு பின்பு கட்டுமான பணிகள் துவக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts