TamilSaaga

ஐந்து வருடங்களாக புகார் அளித்து காத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்… இனியாவது விடியல் பிறக்குமா?

சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுப்பதற்காக புதிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய இயக்கமானது வேலை இடத்தில் தொழிலாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் தைரியமாக புகார் அளிக்க தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. மேலும் இதற்கு உறுதுணையாக சிங்கப்பூர் அமைச்சகத்தின் FAST என்னும் அமைப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இதுவரை கொடுத்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.அதில் பெரும்பாலும் பதிவு செய்த புகார்களை பற்றி மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் எடுத்து கூறியுள்ளார். கடந்த ஐந்து வருடங்களில் தொழிலாளர்கள் சமர்ப்பித்த முக்கியமான ஐந்து புகார்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

அதில் வேலைக்கு லஞ்சம் கொடுப்பது, சிங்கப்பூரின் விதிமுறைகளுக்கு உட்படாத வேலைகளை கொடுப்பது, வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏஜெண்டுகள் பணத்தினை ஏமாற்றுவது, குறிப்பிட்ட சம்பளத்தில் வேலை என்று கூறி அதன் பிறகு சம்பளத்தை கொடுக்காமல் இருப்பது, அவர்களுக்கு ஐபிஎல் குறிப்பிட்ட வேலையை தவிர வேலைகளை கொடுத்து செய்ய சொல்வது போன்றவை தான் முக்கிய புகார்களாக தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்டது என்று விவாதிக்கப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் தொழிலாளர்களின் வேலை இட மரணங்களை குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளும் என சிங்கப்பூரில் பணி புரியும் வெளிநாட்டு ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Related posts