TamilSaaga

வந்தே பாரத் : சிங்கப்பூர் முதல் கொச்சி, பெங்களூரு வரை – வெளியான ஆகஸ்ட் மாத விமான பட்டியல்

அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இருமார்கமாக செல்லவிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து கொச்சிக்கு சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.10 மணியளவில் ஒரு விமானம் புறப்படவுள்ளது. அந்த விமானம் மாலை 7 மணியளவில் கொச்சிக்கு சென்றடையும். மேலும் கொச்சியில் இருந்து ஆகஸ்ட் 10ம் தேதி இந்திய நேரப்படி காலை 6.55 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சிங்கப்பூர் நேரப்படி மதியம் 2.10 மணிக்கு சிங்கப்பூர் வந்தடையும்.

அதேபோல ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.10 மணியளவில் ஒரு விமானம் புறப்படவுள்ளது. அந்த விமானம் மாலை 5.15 மணியளவில் பெங்களூரு சென்றடையும்.

Related posts