TamilSaaga

“பட்டியலில்” முதலிடம் பிடித்து அசத்திய நமது சிங்கப்பூர் : ஆச்சர்யப்படும் சீன நாட்டு பேராசிரியர் – முழு விவரம்

சீனாவைத் தவிர, சிங்கப்பூர் தான் இப்போது சீன மக்களின் விருப்பமான நாடாக உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான குளோபல் டைம்ஸ் (GT) தெரிவித்துள்ளது. ஒரு கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 14 சதவீதம் பேர் சிங்கப்பூரை மிகவும் விரும்புவதாகக் கூறியுள்ளனர், கனடா நாட்டிற்கு கடைசி இடம் கிடைத்துள்ளது, பதிலளித்தவர்களில் 0.4 சதவீதம் பேர் மட்டுமே கனடா நாட்டை விரும்புவதாகக் கூறினர். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மாலத்தீவுகள் அடுத்தடுத்த இடங்களையும் இந்த கணக்கெடுப்பில் பிடித்தன.

இதையும் படியுங்கள் : புத்தாண்டு 2022.. சிங்கப்பூரின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? – முழு பட்டியல் வெளியிட்ட MOM

சீனக் குடிமக்களும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்ல விரும்புவதாகவும், மாலத்தீவு மற்றும் பிரான்ஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் நமது சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முன்னதாக, 2018 ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் ஆறு இடங்களில் இடம்பெருமாம்.

இந்த கணக்கெடுப்பு 16 சீன நகரங்களில் உள்ள வசிப்பவர்களிடமிருந்து 2,148 பதில்களைப் பெற்றது. மேலும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 15 வரை குளோபல் டைம்ஸ் ரிசர்ச் சென்டர் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான DATA100 ஆகியவற்றால் ஆன்லைனில் நடத்தப்பட்டது என்று GT தெரிவித்துள்ளது. மேலும் பதிலளித்தவர்களில் 17.1 சதவீதம் பேர் தாங்கள் அதிகம் பார்வையிட விரும்பும் நாடு சிங்கப்பூர் என்றும், அவர்களுடைய விருப்பப்பட்டியலில் சிங்கப்பூர் முதல் நாடாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். கடந்த 2019 மற்றும் 2020ல் பட்டியலில் முதலிடம் பிடித்த முந்தைய நாடான ஜப்பான் இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

சீனர்களுக்கான மிகவும் பிடித்த நாடாக கனடா இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது, ஆனால் இந்த ஆண்டு பட்டியலில் கனடா பின்தங்கியதற்கான காரணத்தை அந்த பதிவில் விவரிக்கவில்லை. குவாங்டாங் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச வியூகங்களுக்கான பேராசிரியர் Zhou Fangyin GT செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “சீன மக்களின் விருப்பமான நாடாகவும், பயண இடமாகவும் சிங்கப்பூரை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

இதையும் படியுங்கள் : “கோவை முதல் சிங்கப்பூர் வரை” : வெளியானது “Fly Scoot” விமான சேவையின் 2022 ஜனவரி மாத பட்டியல்

மேலும் “கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன, இது சிங்கப்பூர் மீதான சீன மக்களின் ஈர்ப்பை உயர்த்தியுள்ளது” என்று ஜோ கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts