TamilSaaga

“சிங்கப்பூரில் “பதுக்கல்காரர்” என்று நம்பப்பட்ட முதியவர்” : காகிதங்கள் நிறைந்திருந்த வீட்டில் சடலமாக மீட்பு

சிங்கப்பூரில் பதுக்கல்காரர் என்று நம்பப்படும் 72 வயது முதியவரின் சடலம், கடந்த புதன்கிழமை வாம்போவாவில் உள்ள பிளாக் 105 டவுனர் சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. தனது குடியிருப்பில் இறந்து கிடந்த ஒரு நபரின் உறவினர்கள் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) அந்த வீட்டில் கிடந்த தூக்கி எறியப்பட்ட பெட்டிகள், காகிதங்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பல்வேறு பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் 65 வயது வளர்ப்பு தந்தைக்கு 32 மாத சிறை

அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த புதன்கிழமை காலை 9.44 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், அந்த நபர் குடியிருப்பில் அசையாமல் இருப்பதைக் சிலர் கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவர் ஒருவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் போலீசார் தவறான சம்பவம் இதில் ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும். இயற்கை மரணமாகவே இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழன் அன்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அந்த பிளாட்டைப் பார்வையிட்டபோது, ​​ஏராளமான பொருட்கள் தாழ்வாரம் மற்றும் யூனிட் முழுவதும் சிதறிக்கிடந்தன என்றும், மேலும் ஒரு துர்நாற்றம் பாலமாக வீசியது என்றும் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

அந்த நபரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரான, திருமதி லீனா நுயென் கூறியபோது : “அவரை சந்திக்க எந்த உறவினர்களும் வந்ததை நான் பார்த்ததில்லை, ஆனால் அவர் தினமும் காலையில் வெளியே சென்று மாலையில் திரும்பி வருவார்” என்றார். இதுகுறித்து வேறொருவர் பேசும்போது “நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் நான் கடந்த வாரம் அவரைப் பார்த்தேன், நேற்று அவர் திடீரென்று இறந்துவிட்டார் என்பதை நான் அறிந்தேன். அவர் உடல்நிலை அற்றவராக காட்சியளிக்கவில்லை. என்னிடம் பேசும்போது கூட சாதாரணமாகத் தான் பேசினார். அவர் அடிக்கடி கீழே தனியாக அமர்ந்திருப்பார் என்று அவர் மேலும் கூறினார்.

Related posts