TamilSaaga

“நான் ஒரு ஓரமாதான நிப்பாட்டுனேன்” : சிங்கப்பூர் தியோங் போ சாலையில் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து? – Video உள்ளே

சிங்கப்பூரின் தியோங் போ சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற வோல்வோ கார், கடந்த பிப்ரவரி 18 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த BMW மீது மோதிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த காணொளி Sg Road Vigilante என்ற முகநூல் பக்கம் வெளியிட்டுள்ளது. வோல்வோக்குப் பின்னால் இருந்த வாகனத்தின் டேஷ்கேம் காட்சிகளின் அடிப்படையில், ஒருவழிச் சாலையில் இடதுபுறமாகச் சென்ற கார், சாலையின் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த BMW காரின் மீது மோதியது.

சிங்கப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்து

“சிங்கப்பூரில் உரிமம் பெறாத KTV-கான்செப்ட் நிறுவனம்” : 4 வெளிநாட்டு பெண்கள் உள்பட 97 பேரிடம் விசாரணை – என்னவெல்லாம் அங்கு நடந்தது தெரியுமா?

இந்த மோதலில் இரண்டு கார்களும் நொறுங்குகின்றன, மேலும் வோல்வோ காரின் பம்பரின் ஒரு பகுதி இந்த விபத்தில் நொறுங்கியது. மோதியதும் டிரைவர் விரைவாக சுதாரித்து, காரை பின்னோக்கி எடுத்து நிறுத்த அந்த வோல்வோ காரில் இருந்து ஒரு பெண்மணி வெளியேறியதை வீடியோவில் காணமுடிந்தது. இந்த மோதலிலால் வோல்வோ கார் பாண்ட் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற துவங்கியது.

இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளை நிற கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் மார்ச் 31க்குள்… Work Permit மற்றும் S-Pass வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான “முக்கிய” அறிவிப்பை வெளியிட்ட MOM

வாகனத்தை செலுத்தும்போதும் செல்போன் பயன்படுத்துவது, மற்ற விஷயங்களில் தங்கள் கவனத்தை செலுத்துவது தான் இதுபோன்ற விபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்துள்ளது. சாலை குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை கடைபிடித்து சிக்னல்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயம் எல்லாம் விபத்துக்களையும் தவிர்க்கலாம் என்றும் SCDF தெரிவித்துள்ளது. மக்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்கும்போது முறையாக செயல்பட அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts