TamilSaaga

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத மாபெரும் “உச்சம்”.. ஒரே நாளில் கலங்க வைக்கும் பாதிப்பு – அவசரநிலைக்கு மட்டும் ஹாஸ்பிடல் செல்ல MOH உத்தரவு!

SINGAPORE: இன்று (பிப்.22) ஒரே நாளில் 25,000 க்கும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு பிப்ரவரி 15 அன்று 19,420 பாதிப்புகள் பதிவாகியிருந்தன. அதுவே இதுவரை சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது.

ஆக்சிஜன் supplementation மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்றாலும், மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்று MOH சற்றுமுன் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – “தினுசு தினுசா ஏமாத்துறாங்க” : அமெரிக்க வாலிபருடன் கூட்டணி – Microsoft நிறுவனத்துக்கே “அல்வா கொடுத்த” சிங்கப்பூர் இளைஞர்

இந்நிலையில் பலரும் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பொதுப் மருத்துவர் கிளினிக்குகளுக்குச் சென்று, எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும் ஆன்டிஜென் ரேபிட் சோதனை (ART) எடுக்க வலியுறுத்துவதாகவும் MOH கூறியுள்ளது.

| “இதனால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் எங்கள் சுகாதார பணியாளர்களுக்கு மேலும் குறிப்பிடத்தக்க பணிச்சுமையை சேர்த்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு அவசரநிலை ஏற்பட்டால் தவிர, மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்து செல்ல வேண்டாம்” என்று MOH வலியுறுத்தியுள்ளது. |

சிங்கப்பூர் Punggol குடியிருப்பு பகுதி : திடீரென்று அறுந்து விழுந்த கம்பி, அந்தரத்தில் தொங்கிய தொழிலாளர்கள் – கைகொடுத்தது யார் தெரியுமா?

உடனடி சிகிச்சை தேவைப்படவில்லை என்றால் குழந்தைகள் உட்பட இதர நோயாளிகள் பிற அவசர சிகிச்சை கிளினிக்குகள் அல்லது முதன்மைப் பராமரிப்பு கிளினிக்குகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுப்பப்படலாம் என்று அமைச்சகம் மேலும் கூறியது.

இதுகுறித்து MOH அறிக்கையில், “மருத்துவ சேவை உடனடியாக தேவைப்படுபவர்களைப் பாதுகாப்பதில் எங்கள் பங்கைச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் நாடுகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts