TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு.. வேலைக்கு செல்வதற்கு முன்பு இன்று காலையிலேயே MOM-ன் மிக முக்கிய அப்டேட்

SINGAPORE: நமது சிங்கப்பூரில் நேற்று (பிப்.22) ஒரே நாளில், இதுவரை இல்லாத மிகப்பெரிய உச்சமாக 25,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக MOH நேற்று இரவு அறிவித்திருந்தது. நமது தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தில் இதுகுறித்த செய்தியை உடனடியாக நேற்று பதிவிட்டிருந்தோம். இந்நிலையில், இப்போது ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் அலைக்கு மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளால் சுகாதார அமைப்பு தொடர்ந்து அழுத்தங்களை எதிர்கொள்வதால், சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான தொழிலாளர்களிடம் மருத்துவச் சான்றிதழ்களைக் கோரக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் HR துறைகள் நடைமுறையில் உள்ள கோவிட்-19 சுகாதார நெறிமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமல் பணியாளர்களை அவரவர்களின் பணியிடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்க வேண்டும்” ஹேவ்லாக் சாலையில் உள்ள மனிதவள அமைச்சகத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Punggol குடியிருப்பு பகுதி : திடீரென்று அறுந்து விழுந்த கம்பி, அந்தரத்தில் தொங்கிய தொழிலாளர்கள் – கைகொடுத்தது யார் தெரியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தேவையான காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் வேலைக்குச் திரும்ப அனுமதிக்கும் முன், அவர்கள் மருத்துவரிடம் இருந்து recovery memos அல்லது medical assessments போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேசமயம், அதிகாரப்பூர்வ தொற்று பதிவைப் பெற விரும்பும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையங்கள் அல்லது விரைவு சோதனை மையங்களில், மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் self-administered செய்யப்பட்ட ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த சோதனைகளுக்கு மார்ச் 15 வரை அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும், மேலும் சோதனை முடிவுகள் 30 நிமிடங்களுக்குள் HealthHub status-ல் காணக்கிடைக்கும்.

இந்த சோதனை மையங்களில் கண்காணிக்கப்படும் ART களுக்கு உட்பட்டவர்கள், அவர்களின் சோதனை முடிவுகளின் SMS அறிவிப்பையும் பெறுவார்கள். இது கடந்தகால தொற்றுக்கான ஆவண ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம்.

மேலும் படிக்க – நான் சிங்கப்பூர் போலீஸ் பேசுறேன்.. “ஆள் தெரியாமல் வந்து சிக்கிய ஆடு” : போலீஸ் உடையில் இருந்தவரை பார்த்து உறைந்துபோன Scammer

தொடர்ந்து பேசிய அமைச்சர், “அனைவருக்கும் எனது வலுவான அறிவுரை என்னவென்றால், உங்களிடம் மிகவும் லேசான அறிகுறிகள் அல்லது கோவிட் -19 அறிகுறிகள் இல்லாவிட்டால், நீங்கள் GP கிளினிக்கு, பாலிகிளினிக்குகள் அல்லது பொது மருத்துவமனைகளின் ED களுக்கு மருத்துவ சான்றிதழ் பெற செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், நீங்கள் ART-பாசிட்டிவ் சோதனை செய்துள்ளீர்கள் என்றும் உங்கள் நிறுவனங்களிடம் வாய் வார்த்தையாகவே சொல்லிக் கொள்ளலாம்” என்றார்.

“இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும், அனைவரின் ஆதரவையும் பெறுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்று தனது அறிவிப்பை அமைச்சர் டான் சீ லெங் நிறைவு செய்தார்.

இந்த தகவலை சிங்கப்பூரில் பணிபுரியும் உங்கள் சக நண்பர்களும் தெரிந்து கொண்டு பயன்பெற உதவுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts