TamilSaaga

சிங்கப்பூரில் தான் இனி skilled test… ஜனவரி முதல் வர இருக்கும் பெரிய மாற்றங்கள்… தமிழக இன்ஸ்ட்யூட்களின் நிலை என்ன? இளைஞர்கள் என்ன செய்யலாம்?

பெரிய படிப்பு பின்னணி இல்லாத ஊழியர்களின் முதல் சாய்ஸாக இருப்பது skilled test தான். தமிழ்நாட்டை சேர்ந்த இன்ஸ்ட்யூட்களின் பயிற்சி எடுத்து பாஸ் செய்து சிங்கப்பூரில் வேலைக்கு வருவார்கள். ஆனால் சில காலமாக இதில் தான் பிரச்னை உருவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வர டெஸ்ட் அடித்த பலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், பொருளாதார பிரச்னையாலும் டெஸ்ட் அடித்து அதில் பாஸ் ஆகியும் சிங்கப்பூர் வராமல் இருந்து விடுகின்றனர். இதனால் குறிப்பிட்ட பணிகளுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட கோட்டாக்கள் நிரம்பியது.

ஆனால், அந்த ஊழியர்கள் யாரும் சிங்கப்பூர் வரவில்லை. அவர்கள் வந்தப்பின் அடுத்தக்கட்ட கோட்டாவை ரிலீஸ் செய்யலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு விட்டது. இது பலரும் அறிந்த சேதி தான். இது இப்படி இருக்க இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் எனக் கூறி தொடர்ந்து அட்மிஷன் போட்டு விட்டு கோட்டா வந்ததும் கால் செய்து அழைக்கிறோம் என தமிழகத்தினை சேர்ந்த டெஸ்ட் இன்ஸ்ட்யூட்கள் அனுப்பி வைத்தனர்.

மாதாமாதம் இந்த அட்மிஷன் கணக்கு எக்கசக்கமாக அதிகரித்தது. சிங்கப்பூர் வெளியிடும் கோட்டாவை தமிழகத்தில் உள்ள ஒரு இன்ஸ்ட்யூட்டே மூன்று மடங்கு அதிகமான அட்மிஷன்களை போட்டு வைத்துள்ளனர். அப்போ மொத்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து இன்ஸ்ட்யூட்களின் அட்மிஷன் எண்ணிக்கையை நீங்களே கணிக்கிட்டு கொள்ளுங்கள்.

ஒரு எலக்ட்ரீசியன் வேலைக்கு டெஸ்ட் அடிக்க 1 வருடம் ஆகும் நிலையும் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணத்தால் டெஸ்ட் அடிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறி அட்மிஷன் போட்டால் உங்களுக்கு தான் வெயிட்டிங் காலம் அதிகமாகும்.

இந்நிலையில், சிங்கப்பூர் தரப்பில் ஒரு கிசுகிசுக்கள் உருவாகி இருக்கிறது. அதன்படி பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஸ்ட்யூட்கள் மூடப்பட இருக்கிறதாம். சிங்கப்பூரில் தான் ஜனவரி முதல் டெஸ்ட் தேர்வுகள் நடத்தப்பட்ட இருப்பதாக தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் நீங்கள் டெஸ்ட் இன்ஸ்ட்யூட்களில் கட்டப்பட்ட தொகையை வாங்க இயலாமல் போகும்.

ஆனால், இதன் உண்மையான நிலவரங்கள் தெரிய ஜனவரி வரை பொறுமையாக தான் இருக்க வேண்டும். பெரிய அளவிலான விதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் ஜி.எஸ்.டியும் அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் ஜனவரி வரை சிங்கப்பூருக்கு வரும் test அடிக்க விரும்பும் இளைஞர்கள் சற்று பொறுமையாக நிலவரத்தினை கவனிப்பதே நல்லது. அறிவிப்புகள் வெளியானவுடன் சிங்கப்பூர் வரும் பணிகளை மேற்கொள்ளலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts