TamilSaaga

வழுக்கும் பாறையும், மலையும் எனக்கு தடையில்லை.. படிப்புக்காக 14கிமீ வைராக்கிய பயணம் – அசத்தும் 12 வயது மாணவன்

கற்கை நன்றே.. கற்கை நன்றே.. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது நமது தமிழ் பாடி ஔவையாரின் பொன்மொழிகள். பிச்சை எடுத்தாவது படித்துவிட வேண்டும் என்று வைராக்கியம் பலரிடம் உண்டும், அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டாக வாழ்கின்றான் இந்த மலேசிய சிறுவன்.

ஒரு மலேசிய இளைஞன், மலை, பள்ளம், வழுக்கும் பாறைகள் என்று 14 கிமீ பயணித்து படித்து வருகின்றான். தனது படிப்பை எப்படியும் தொடர்ந்துவிடவேண்டும, மேல்நிலைப் பள்ளிக் கல்வியைத் முடித்துவிடவேண்டும் என்ற வைராக்கியத்துடன் பயணித்து வருகின்றான்.

Ayon Manson என்ற 12 வயது சிறுவனின் கதையை முதன்முதலில் அவரது முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான ஃபெரா எர்னா போனிஸ் தற்போது அவரது “சிங்கப்பூர்.. 3,00,000 வெள்ளி லஞ்சம் பெற்ற மெகா ஊழல் வழக்கு”.. 3 தமிழர்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு – 5 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

“The Sun” செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, மலேசிய நாட்டின் சபாவின் பெனாம்பாங்கில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர் தான் Manson. அங்கு அவர் தனது ஆரம்ப நிலை கல்வியை SK Terianல் முடித்துள்ளார். 12 வயதில், Mansonனுக்கு ஒரு கடினமான முடிவை எடுக்கும் நிலை வந்தது.

ஒன்று வீட்டில் தங்கி அவரது குடும்பத்திற்கு உதவுவது அல்லது அவர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக தனது கிராமத்தை விட்டு வெளியேறுவது. ஆனால் Manson கிராமத்தை விட்டு சென்று படிக்க தேவையான செலவை செய்யும் அளவில் அவரது குடும்பம் இல்லை.

Manson அவரது குடும்பத்தில் பிறந்த 4வது பிள்ளை, மொத்தம் அவருடன் கூட பிறந்தவர்கள் 6 பேர். விவசாயம் செய்யும் அவர் தந்தை மட்டுமே அந்த வீட்டை காப்பாற்றும் ஒரே நபர். இந்நிலையில் அவரது குடும்பத்தின் நிதிச் சிக்கல்கள் மற்றும் அவரது கிராமத்திற்கும் இடைநிலைப் பள்ளிக்கும் இடையே உள்ள புவியியல் தடையின் காரணமாக, அயோன் தனது கல்வியைத் கைவிட எண்ணினார்.

அந்த நேரத்தில் தான் அதே பகுதியில் வசிக்கும் Ferra என்ற பெண்ணுடன் பேசும் வாய்ப்பு Mansonனுக்கு கிடைக்க. Ferraவின் உதவியால் மீண்டும் கல்விகற்கும் ஆர்வம் அந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் யோசித்த சிறுவன் வீட்டிற்கு எந்த பாரமும் கொடுக்காமல் நகரம் சென்று படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். இந்த விஷயத்தை தனக்கு அறிவுரை கூறிய Ferraவிடம் கூட அவன் தெரிவிக்கவில்லை.

“சாலை விதிகளை மீறிவிட்டாய்.. லஞ்ச பணத்தை யாருக்கும் தெறியாமல் எங்க காரில் போடு” – சிங்கப்பூரரை மிரட்டய மலேசிய போலீஸ்? – வெளியான வீடியோ

பொழுது புலர்ந்தது, நகரத்திற்கு சென்று என்ன செய்யப்போகிறோம்? எப்படி பள்ளியில் சேரப்போகிறோம்? என்ற கவலை எதுவுமே இல்லாமல் நான் கல்விகற்க வேண்டும், அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கூறி தனது உடமைகளை முன்னும் பின்னனும் உடலில் மாட்டிக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளான் மேன்சன்.

அவன் கிராமத்தில் இருந்து நகரத்தை அடைய சுமார் 14 கிலோமீட்டர் செல்லவேண்டும், அதுவும் கல்லும், முள்ளும், மலையும் நிறைந்த பாதை அது. ஆனால் துணிந்த நடையோடு வீட்டைவிட்டு புறப்பட அவனை வழியில் கண்ட சிலர் அவனது வீட்டில் சென்று தகவல் தெரிவிக்க. அதற்குள் தனது பயணத்தின் பாதி தொலைவை அடைந்துள்ளன அந்த சிறு சிங்கம்.

இறுதியில் Ferraவிற்கு விஷயம் தெரிய தனது காரை எடுத்துக்கொண்டு அவனை தேடி சென்றுள்ளார், அப்போது ஒரு மலையில் துளியும் தளர்வின்றி கல்வியை நோக்கி அவன் பயணம் செய்வதை கண்டு கலங்கியள்ளார். இறுதியில் அவனுடைய மேல்நிலை படிப்புக்காக ஒரு பள்ளியில் சேர்த்து அவனை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

தற்போது பல முன்னணி திரை நட்சத்திரங்கள் அவன் கல்விக்கு உதவி வருகின்றனர், எதிர்காலத்தில் ஒரு தீயணைப்பு வீரனாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளான் அந்த சிறுவன். கற்கை நன்றே.. கற்கை நன்றே.. பிச்சை புகினும் கற்கை நன்றே..

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts