TamilSaaga

குழந்தைகளை கவனித்து கொண்டே Food Delivery.. அசராத சிங்கப்பெண் – சிங்கப்பூரை கலக்கும் Super Mom

சிங்கப்பூரில் ஒரு பெண், பகுதி நேர Grab Food டெலிவரி வாக்கர் ஆக பணியில் அண்மையில் சேர்ந்துள்ளார். ஆனால் இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர் தனது இரண்டு குழந்தைகளையும் Food Delivery செய்ய அழைத்துச் செல்கிறார் என்பது தான்.

கடந்த ஜூலை 13ம் தேதி TikTokல் வெளியான ஒரு வீடியோவில் தான் அந்த பெண்மணி தனது குழந்தைகளுடன் Food Delivery செய்ய செல்வது வெளியானது. அந்த காணொளி வெளியான வெகு சில நாட்களில் அதை சுமார் 8,68,000 பேர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில், அந்த பெண்மணி தனது வழக்கமான வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கிராப்ஃபுட் டெலிவரி பை அவரது வேகனின் பின்புறத்தில் வைக்கப்பட, அந்த சிறிய வண்டியின் முன்பக்கத்தில் அவரது இரண்டு குழந்தைகளான ஆயிஷா மற்றும் அமர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

சிங்கப்பூர் Toto Draw.. 11.4 மில்லியன் வெள்ளி டாப் பரிசு.. பங்குபோட்டுக்கொண்ட இரண்டு பேர் – இன்னும் பல சுவாரசிய தகவல்கள்!

Mummy Dee என்ற TikTok பெயர் கொண்ட அந்த தாய் தனது குழந்தைகளை கவனித்துக் கொண்டே உணவு ஆர்டர்களை சேகரித்து வழங்குவதாக கூறியுள்ளார். அதே போல அந்த நாளின் முடிவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.

குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் நேரத்தில் நான் எனக்கான பணத்தை ஈட்டும் வேலையை செய்து வருகின்றேன். இது எனக்கு வாடிக்கையான ஒன்று தான் என்று கூறுகின்றார் இந்த டிஜிட்டல் தாய். உண்மையில் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டே வேலை செய்வது கடினம் என்றாலும் அதிலும் பல நன்மைகள் உள்ளது என்கிறார் Mummy Dee.

குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால் அவர் இப்படி செய்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts