TamilSaaga

சிங்கப்பூரில் Productivity and Innovation Credit : 11.8 மில்லியன் மோசடி – 36 பேர் மீது வழக்கு பதிவு – நடந்தது என்ன?

சிங்கப்பூரில் PIC (Productivity and Innovation Credit) எனப்படும் உற்பத்தித்திறன் மற்றும் கண்டுபிடிப்பு கடன் மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 36 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியான ​​ஒரு செய்தி அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 11.8 மில்லியன் அளவிற்கு மோசடி நடந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2014 மற்றும் 2016க்கு இடையில் சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (ஐஆர்ஏஎஸ்) பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்களுடன் அவை இணைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் 2010ம் ஆண்டு பட்ஜெட்ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த PIC திட்டம், குறிப்பிட்ட உற்பத்தித்திறன் மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யும் வணிகங்களுக்கு வரி விலக்குகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4,00,000 வெள்ளி வரையிலான தகுதிச் செலவுகளில், வணிகங்கள் வரிச்சலுகைகள் அல்லது கொடுப்பனவுகளில் 400 சதவிகிதம் வரை கோர முடிந்தது. வரி விலக்கு கோருவதற்கு பதிலாக, ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் மொத்த செலவில் 1,00,000 வெள்ளி வரை வரி அல்லாத ரொக்கமாக மாற்றுவதற்கான விருப்பமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2018 மதிப்பீட்டு ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் காலாவதியானது.

இந்நிலையில் வேண்டுமென்றே நீதியின் போக்கை திசைதிருப்பியவர்ளுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts