சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சென்ற வாரம் தடையில்லாத வர்த்தக முறைகள், உள்நாட்டு வேலை வாய்ப்பு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
தடையில்லாத வர்த்தகத்தில் உள்ள உண்மையான சரியான தகவல்களை கொடுக்க விரும்புவதாகவும், ஊழியர்களை பணியமர்த்துவதில் காணப்படும் நியாயமற்ற முறைகளை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு மேல்நிலை வேலைக்கான அனுமதி அட்டையுடன் வருபவர்களின் திறன் மற்றும் தகுதியை சரியான வகையில் மதிப்பீடு செய்ய ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
TAFEP எனப்படும் நியாயமான முற்போக்கு வேலைவாய்ப்புக்கான நடைமுறை மற்றும் அதன் பங்களிப்பு மேம்படுத்தப்படும் எனவும் கூறினார்.
சிங்கப்பூர் தனது கொள்கைகளை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் போட்டி மிகுந்த உலகத்தில் முன்னோடியாக திகழவும் அதற்கான முயற்சிகளை செய்வதாகவும் கூறினார்.