நியூசிலாந்தை சேர்ந்த பிரபல YouTuber கர்ல் எட்வார்டு ரைஸ், இவரது மனைவி மனீஷா டெல்லியை சேர்ந்தவர்.
இவர் கர்ல் ராக் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அந்த சேனலில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளை பற்றி அவர் வீடியோ போட்டு வருகிறார்.
அந்த யூடியும் சேனலில் சுமார் 1.79 மில்லியன் Subscribers உள்ளனர். கடந்த 2019ல் மனீஷாவை திருமணம் செய்துகொண்ட அவர் மனைவியுடன் டெல்லியில் தங்கி வந்துள்ளார். அப்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை விதைக்கும் வண்ணம் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவுக்கு (CAA) எதிரான போராட்டங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் இந்தியாவின் விசா விதிமுறைப்படி 180 நாட்கள் தங்கிவிட்டு விசாவை புதுப்பிக்காமல் அவர் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு சென்றார்.
தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்காக விசா புதுப்பிக்க அவர் அளித்துள்ள விண்ணப்பத்தை இந்திய உள்துறை அமைச்சகம் 1 ஆண்டிற்கு தடை செய்து நிராகரித்துள்ளது.
சுற்றுலா விசாவில் சென்ற ஆண்டு வந்த அவர் விதிமுறைகளை மீறி தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தானில் இருந்தபோது ISI-யின் கண்காணிப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
தற்போது “நான் ஏன் எனது மனைவியை 269 நாட்களாக பார்க்கவில்லை” என்ற பெயரில் ஒரு புதிய வீடியோவையும் அவர் யூடியூபில் பதிவிட்டுள்ளார்.