TamilSaaga

வங்கிகளுடன் இணைந்து செயல்பட்ட சிங்கப்பூர் போலீஸ் – முதலீட்டு மோசடிகள் முறியடிப்பு

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக வங்கிகள் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள ஹோலாந்து கிராமத்தில் உள்ள Standard Charted வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 7ஆம் தேதி கொள்ளையடித்த நபருக்கு சில தினங்களுக்கு முன்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து சிங்கப்பூருக்கு சமூக வருகைக்கான அனுமதி பெற்று நுழைந்த அந்த நபர் வங்கியில் தன்னிடம் துப்பாக்கி உள்ளதாக ஒரு பேப்பரில் எழுதிக்கொடுத்து மிரட்டி சுமார் 30,400 க்கும் மேற்பட்ட வெள்ளிகளை கொள்ளை அடித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர் காவல்துறை 6 வங்கிகளுடன் இணைந்து சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. DBS வங்கி, UOB, OCBC, HSBC, சிட்டி வங்கி மற்றும் Standard Chartered வங்கிகள் இந்த செயலில் ஈடுபட்டன.

காவல் துறையுடன் வங்கிகள் இணைந்து நடித்திய நடவடிக்கையில் 150க்கும் மேற்பட்ட முதலீட்டு மோசடிகளும், போலி சூதாட்டத் தள மோசடிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் போலீசாருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் 16 வயதில் இருந்து 77 வயது வரையிலான 558 ஆண்கள் மற்றும் 23 பெண்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.

Related posts