TamilSaaga

“பாசிர் ரிஸ் பகுதியில் தீடீர் வெள்ளம்” – கட்டுமான நிறுவனமான சாம்வோவுக்கு எதிராக PUB நடவடிக்கை

சிங்கப்பூரில் செயல்படும் தேசிய நீர் நிறுவனமான PUB, கடந்த மாதம் பாசிர் ரிஸில் நீடித்த வெள்ளத்தை ஏற்படுத்திய “அங்கீகரிக்கப்படாத வடிகால் பணிக்காக” கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட நிறுவனமான சாம்வோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டேம்பைன்ஸ் அவென்யூ 10 மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 12 ஆகியவற்றின் சந்திப்பு வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை, ஆனால் சம்வோவின் நடவடிக்கைகள் வெள்ளத்திற்கு வழிவகுத்தது என்று நம்பப்படுகிறது.

ஆகஸ்ட் 20 அன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கார்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வெள்ளத்தால் சிக்கித் தவித்தனர் என்று PUB இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சாம்வோவுக்கு எதிராக சாக்கடை மற்றும் வடிகால் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யும். புயல்-நீர் வடிகால் அமைப்பை பாதிக்கும் பணிகளுக்காக குற்றவாளிகள் 50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெள்ளத்தால் போக்குவரத்து சந்திப்பின் 200 மீ பகுதி பாதிக்கப்பட்டது, சில இடங்களில் முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. 13 வாகனங்கள் ஓரளவு நீரில் மூழ்கியது மற்றும் பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வெளியேற்ற உதவி தேவைப்பட்டது. மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

சிங்கப்பூரில் வழக்கமாக ஏற்படும் வெள்ளம் 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காத நிலையில் இந்த வெள்ளம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts