சிங்கப்பூரின் துறைமுக ஆணையமான பி எஸ் ஏ எனப்படும் நிறுவனத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.ஏனென்றால் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனமானது தற்பொழுது கப்பல் இறக்குமதியில் புது சாதனை படைத்துள்ளது.இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூர் துறைமுகத்திற்கு மூன்று பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் வருகை தந்துள்ளதாக பி எஸ் ஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கப்பலின் எடையை கொண்டு துறைமுகத்தின் போக்குவரத்து ஆனது கணிக்கப்படும். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ஒன் ஒலிம்பஸ் எனப்படும் சிங்கப்பூர் கப்பல் பஷீர் பஞ்சாங் கப்பல் முனையத்திற்கு வந்ததை தொடர்ந்து இந்த புது சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2004 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் வந்தன. அதற்கு அடுத்தபடியாக 2011 ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் எடையுள்ள கப்பல்கள் வந்தன. அதை தொடர்ந்து கடல் கொந்தளிப்பு தொடர்ந்து இருந்து வந்ததை அடுத்து கப்பல் போக்குவரத்தை கையாள்வதில் சிறு சிரமம் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது சிங்கப்பூர் துறைமுகம் புது சாதனை படைத்துள்ளது.
இது குறித்து துறைமுகத்தின் நிர்வாக அதிகாரிகள் கூறும் பொழுது கடற்கரையில் சிங்கப்பூர் சிறந்து விளங்குவதை இந்த சாதனை எடுத்துக்காட்டுகின்றது என்று கூறி மகிழ்ந்தனர். மேலும் அரசாங்கம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பால் இந்த சாதனையை படைக்க முடிந்தது என்று பாராட்டினர் இனிவரும் காலங்களில் இந்த சாதனையை முறியடிக்கும் அளவிற்கு சிங்கப்பூரின் கப்பல் போக்குவரத்து அமையும் எனவும் நம்பிக்கையுடன் கூறினார்.