TamilSaaga

“சிங்கப்பூரில் வயதான பெருந்தொற்று நோயாளிகளுக்கான முதல் சமூக சிகிச்சை வசதி” – Tampinesல் திறப்பு

சிங்கப்பூரில் வயதான பெருந்தொற்று நோயாளிகளுக்கான முதல் சமூக சிகிச்சை வசதி இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) செயல்படத் தொடங்கியுள்ளது. சுகாதார அமைச்சகம் (MOH) வூட்லேண்ட்ஸ் ஹெல்த்துடன் இணைந்து 250 படுக்கைகள் கொண்ட வசதியை Tampinesல் உள்ள NTUC ஹெல்த் நர்சிங் ஹோம் மூலம் அமைத்துள்ளது.

லேசான அறிகுறிகளைக் கொண்ட மற்றும் பொதுவாக நன்றாக இருக்கும் ஆனால் நெருக்கமான கண்காணிப்பு தேவைப்படும் அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட வயதான பெருந்தொற்று நோயாளிகளைப் பராமரிப்பதற்காக MOH ஆல் சமூக சிகிச்சை வசதிகள் அமைக்கப்படுகின்றன.

“இத்தகைய வசதிகள் அதிக மருத்துவ மற்றும் செவிலியர்களை கொண்டிருக்கும், அத்துடன் மருத்துவ கண்காணிப்பு உபகரணங்களும் இருக்கும் என்று MOH வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. “இது எங்கள் மருத்துவமனை திறனை அதிகரிக்கும், மேலும் எங்கள் மருத்துவமனைகளில் தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கும்” என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் மற்ற NTUC ஹெல்த் நர்சிங் ஹோம் கிளைகளுக்கு மாற்றப்பட்டனர் என்று சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Related posts