TamilSaaga

ஆங்கில புத்தாண்டுக்காக முக்கிய சாலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்… உங்க பயணத்தை முன்கூட்டியே பிளான் பண்ணுங்க!

சீன புத்தாண்டு மட்டுமல்லாமல் ஆங்கில புத்தாண்டுக்கும் சிங்கப்பூரில் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. குறிப்பாக சொல்ல போனால் கொண்டாட்டத்திற்கு முக்கியமான மையப் பகுதியாக கருதப்படுவது மெரினா பே ஆகும். இந்நிலையில் பகுதியினை சுற்றியுள்ள சாலைகளுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை வரை கொண்டாட்ட நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சாலைகளை மூட காவல்துறை முடிவு செய்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக இதுவரை ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்காக கூடும் மக்களின் எண்ணிக்கையானது குறைவாக காணப்பட்டது. அதனால் இந்த ஆண்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை சிறப்பு அதிகாரிகள், பொது போக்குவரத்து துறை சிறப்பு அதிகாரிகள், கரையோர காவல் படையினர் போன்றோர் பாதுகாப்பினை உறுதி செய்ய ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ட்ரோன் வழியாக வான்வெளி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாலை வழியாக பயணம் செய்ய முற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கேற்றார் போல் உங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Related posts