TamilSaaga

“சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு” : எப்போது தொடங்கும்? என்னென்ன விஷயங்கள் அரங்கேறும் – முழு விவரம்

சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேசிய தின அணிவகுப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) மாலை 6.05 மணிக்கு தொடங்குகிறது. அணிவகுப்பு மற்றும் விழா பிரிவில் பிரபலமான போர் விமான சாகச காட்சிகள் மற்றும் ரெட் லயன்ஸ் பாராசூட்டிஸ்டுகளின் தரையிறக்கம் ஆகியவை இடம்பெறும். அதே நேரத்தில் நிகழ்ச்சி பிரிவு சிங்கப்பூர் நாட்டின் அடையாளம் குறித்தும் காணொளிகளை ஒளிபரப்பும்.

மேலும் இந்த அணிவகுப்பு NDPeeps Facebook மற்றும் YouTube கணக்குகளில் அதிகாரப்பூர்வ நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த ஆண்டு நிகழ்ச்சி இயக்குனர் பூ ஜன்ஃபெங் தலைமையிலான – பொது தேசிய கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் முன்னோட்டங்கள் இல்லாமல், மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோக்கிம் கோம்ஸ், ஈஸ்வரி குணசாகர், லைலி மற்றும் பாட்ரிசியா மோக் ஆகியோரால் நடத்தப்படும். மேலும் சுமார் 600 கலைஞர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் இது கடந்த 2018ல் மெரினா பே மிதக்கும் மேடையில் நடைபெற்ற கடைசி NDPல் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் அளவில் 30 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.

இஞ்ச் சுவா, அலேம் பெர்னாண்டஸ், மாண்டோபாப் இரட்டையர்களான தி ஃப்ரெஷ்மேன் (கேரி யியோ மற்றும் சென் தியா), பெஞ்சமின் கெங், நிக் சேவியர் மற்றும் யுங் ராஜா ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். பார்வையாளர்கள் தேசிய தின அணிவகுப்பை வீட்டிலேயே இருந்து பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். மெரினா விரிகுடாவைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜூபிலி மற்றும் ஹெலிக்ஸ் பாலங்கள் இன்று சனிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 11.59 மணி வரை மூடப்படும்.

Related posts