TamilSaaga

சிங்கப்பூர் தேசிய தினத்தன்று என்ன தான் நடக்கும்? சுவாரஸ்யமான சில தகவல்கள்!

சிங்கப்பூரின் தேசிய தினம் வருகிற ஆகஸ்ட் மாதம் 9-ம் நாள் கொண்டாடப்படவிருக்கிறது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்த தினத்தை சிங்கப்பூர் தேசிய தினமாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த தேசிய தின கொண்டாட்டம் 59-வது வருடத்தை எட்டியுள்ள நிலையில், இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. 

அப்படி என்னென்ன தான் இந்த தேசிய தின கொண்டாத்தில் நடக்கும்?

இந்த தேசிய தின கொண்டாட்டம் Marina Bay பகுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக இரண்டு ஒத்திகைகள் பார்க்கப்பட்ட பின்னர் 9-ம் தேதி உண்மையான கொண்டாட்டம் நடைபெறும். இதனை  ஏறத்தாழ 27000 மக்கள் வரை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க முன்பதிவுகள் அவசியம் என்ற நிலையில் முன்பதிவுக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட லிங்க்-கை க்ளிக் செய்து விவரங்களை அறிந்துகொள்ளவும்! https://tamilsaaga.com/news/national-day-parade-important-conditions/

சிங்கப்பூர் தேசிய தினத்தன்று நாட்டின் பல்வேறு பாதுகாப்புப் படைகள் தங்கள் வீர அணிவகுப்பை நிகழ்த்துவர். தங்கள் படையில் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏமாற்றும் அவை செயல்படும் விதங்களைக் குறித்த மாதிரிக் காட்சிகளும் இடம்பெறும். 

இந்த வருடம் ஏறத்தாழ 2100 வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த அணிவகுப்பை நிகழ்த்தவுள்ளனர். அதில்  ஏறத்தாழ 40- பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப் படவுள்ளன. 

வீரர்கள் படை, தன்னார்வலர் குழு, தொண்டு நிறுவனங்கள், பொருளாதார தன்னார்வலர்கள் என ஏராளமான குழுக்கள் அணிவகுப்பை நிகழ்த்தவுள்ளனர். சிங்கப்பூர் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டு 40 வருடம் நிறைவடைந்ததை அடுத்து, அணிவகுப்பின் நடுவே TD-40 என்ற எழுத்து வரிசை கொண்ட அணிவகுப்பும் நடக்கும். 

21 குண்டு முழங்க குடியரசுத்தலைவருக்கு நடத்தப்படும் வீர வணக்கம், புதிய ரக 25-Punder துப்பாக்கிகள் கொண்டு நடத்தப்படவிருக்கிறது. 

இது தவிர SAF எனப்படும் Singapore Armed Force-ன் இரண்டு புதிய ரக வாகனங்கள் இந்த வருடம் முதன் முதலாக அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. National water Agency PUB மற்றும் Red Cross போன்ற அமைப்புகளின் வாகனங்கள் தான் புதிதாக பங்கேற்கவுள்ளன. 

PUB-ல் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கர் பங்கேற்கவுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலங்களில் இந்த வாகனங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. 

Red Cross-ன் சார்பாக அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பங்கேற்கிறது. வீல் சேர் வசதியுடன் கூடிய 10 நபர்கள் வரை அமரக்கூடிய இந்த வாகனம், மக்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்படும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.    

மேலும் 6-ம் தலைமுறை Fire Fighting வானங்களும், இரண்டாம் தலைமுறை ரோபோ-க்களும் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts