TamilSaaga

“அமெரிக்காவில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற வழக்கு” – சிங்கப்பூரில் இரு “இந்தியர்கள்” மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பணம் பெறும் செயலில் ஈடுபட்டதாக இரு இந்தியர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சந்து ஹர்குர்னெக் சிங் (27), மற்றும் பாங்கியா சவுரப் (21) ஆகியோர் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். பணம் செலுத்தும் சேவைகள் சட்டத்தின் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டை சிங் எதிர்கொள்கிறார்.

“புத்தம் புதிய டாலர் நோட்டுகள் வேண்டுமா” 

இந்நிலையில் நீதிமன்ற ஆவணங்களின்படி, பாங்கியா என்ற அந்த 21 வயது இளைஞர் சிங்கின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் 9 வரை அமெரிக்காவில் இருந்து $134,546.37 பெறுவதற்காக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கிக் கணக்கைத் துவங்கியுள்ளார். இந்தத் தொகையானது, ஒரு அறியப்படாத நபரின் குற்றச் செயல்களால் கிடைத்த தொகை என்றும் இந்த பணத்தை சத்வந்த் சிங் என்பவர் பெற்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

முன்னதாக, சந்து சிங் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மற்றொரு தொகையைப் பெற்று அதே நபரிடம் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கடந்த புதன்கிழமை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு பஞ்சாபி மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசுகையில், இருவரும் வழக்கறிஞர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்களின் வழக்குகளின் அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 19 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts