சிங்கப்பூர் நைட் சஃபாரியில் உள்ள நான்கு சிங்கங்கள் பெருந்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததாக விலங்குகள் மற்றும் கால்நடை மருத்துவ சேவை (AVS) கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நைட் சஃபாரியில் உள்ள நான்கு ஆசிய சிங்கங்களும், சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு ஆப்பிரிக்க சிங்கமும், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் முறையே இருமல், தும்மல் மற்றும் சோம்பல் உள்ளிட்ட நோயின் லேசான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மாண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பெருந்தொற்று நேர்மறையாக சோதனை செய்த பிறகு சிங்கங்களுக்கும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. தேசிய பூங்கா வாரியத்தின் கீழ் வரும் AVS, நான்கு ஆசிய சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதித்தது அதன் பிறகு அவைகளுக்கு பெருந்தொற்று இருப்பதாய் உறுதிப்படுத்தினார்.
நோய் அறிகுறிகளைக் காட்டிய ஆப்பிரிக்க சிங்கத்திற்கான சோதனை தற்போது நடந்து வருகிறது. விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ் ஒன்பது ஆசிய சிங்கங்களையும் ஐந்து ஆப்பிரிக்க சிங்கங்களையும் அந்தந்த குகைகளில் தனிமைப்படுத்த மண்டாய் வனவிலங்கு குழுவிற்கு AVS உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிகுறிகளைக் காட்டிய ஐந்து விலங்குகளும் இதில் அடங்கும். சிங்கங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க மண்டாய் வனவிலங்கு குழுமத்துடன் இணைந்து செயல்படுவதாகவும், மீதமுள்ள சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதிப்பதாகவும் AVS தெரிவித்துள்ளது.
விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் (OIE) கூற்றுப்படி, மனிதர்களுக்கு நோய் பரவுவதில் விலங்குகள் பங்கு வகிக்கின்றன என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கால்நடை சேவைகளின் துணைத் தலைவர் டாக்டர் சோன்ஜா லஸ் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், சிங்கங்களுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, நைட் சஃபாரியில் டிராம் பாதையில் ஆசிய சிங்கம் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.