விக்னேஸ்வரி ஜெகதரன், பார்ப்பதற்கு ஒரு சராசரி சிங்கப்பூரர் போல் தினமும் வேலைக்கு சென்று வந்து, 3 அறைகள் கொண்ட வீட்டில் தனது குடும்பத்துடன் இரவு உணவை அருந்தி வாழும் ஒரு சர்வசாதாரண பெண். Mothership நிறுவனத்திற்கு அவர் அளித்த ஒரு பிரத்தியேக பேட்டியினை நாம் இப்பொது காணலாம்.
சரி! பார்ப்பதற்கு ஒரு சர்வசாதாரணமான பெண்ணை ஏன் ஊடகம் சென்று பேட்டி எடுக்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். காரணம் உண்டு, முதலில் அவர் அளித்த பேட்டியினை பற்றி பார்க்கலாம்.
ஒரு Single Parentஆக, விக்கினேஸ்வரி தனது மகன் இம்மானுவேலுடன் ஒரு நெருக்கமான பந்தத்தை கொண்டிருந்ததாக முதலில் கூறினார். “அவன் இறப்பதற்கு முன்பு, நான் வேலை முடிந்து வீடு திரும்பும் போதெல்லாம் விதவிதமாய் தேநீர் தயாரித்து கொடுப்பான். துணிகளை துவைப்பது, வீட்டு வேலைகளை செய்வது என்று வீட்டையே சும்மா டிப் டாப்பாக வைத்திருப்பான்” என்றார் கனத்த குரலுடன்.
ஒரு தாயும் மகனுமான நாங்கள் நிறைய நேரங்களை ஒன்றாக செலவிட்டுளோம், அதிலும் குறிப்பாக Week Endகள் தான் எங்களுக்கான நேரம். திரைப்படம் செல்வோம் குறிப்பாக எனக்கு ஷாப்பிங் செல்ல ரொம்ப புடிக்கும். நான் வாங்கும் ஆடைகளும் ஜட்ஜ் என் மகன் தான் என்கிறார் விக்கினேஸ்வரி.
எல்லா விஷயத்திலும் என் மீது மிகுந்த பாசம் கொண்ட என் மகன் இம்மானுவேல், அக்கறையுள்ள மகன் மட்டும்மல்ல ஒரு Perfectionistம் கூட, ஆம் அவன் என்னை போல ஒரு Perfectionist என்றார் மெல்லிய புன்னகையுடன். எதையும் கொஞ்சம் மனதில் ஆழமாக எடுத்துச்சென்று யோசிப்பவன், இம்மானுவேல் தனது இடைநிலை கல்வியை முடிக்கவிருக்கும் தருணத்தில் தான், எதோ ஒரு மன அழுத்தம் அவனை சிறுவயது முதல் பாதித்து வருவதை நான் கவனித்தேன். படிப்பு ரீதியாகவும் சமூக அழுத்தங்கள் மூலமும் அவன் பாதித்திருந்தான் என்று எனக்கு அன்று வரை தெரியவில்லை. படிப்பில் அவன் படுகெட்டி என்றபோது இன்னும் நான் நன்றாக படிக்கவேண்டும் என்று தனக்குத்தானே கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்வான்.
நாளடைவில் ஒரு ஒழுங்கற்ற தூக்க முறையில் உறங்க துவங்கினான், பகலில் நாள் முழுதும் தூங்குவான், இரவில் விழித்திருந்து கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவான். சில சமயங்களில் அதீத கோபம்கொண்டு என்னிடமும் அதை வெளிப்படுத்துவான். அந்த நேரத்தில், விக்கினேஸ்வரி கவுன்சிலிங் சைக்காலஜியில் தனது முதுகலைப் படிப்பைத் படித்துக்கொண்டிருந்த நேரம். அவரும் ஒரு மனநல ஆலோசகர் என்பதால் தனது மகன் “உண்மையிலேயே வேதனையான” மன அழுத்தத்தை அனுபவித்து வருவதை அவர் புரிந்துகொண்டுள்ளார். என்னதான் உளவியல் படித்தாலும் தாய் என்று வரும்போது படிப்பு பலன்தராது, ஆகையால் இம்மானுவேலை மனநலக் கழகத்தில் உள்ள Child Care Centerக்கு அழைத்து சென்றார்.
அங்கு இம்மானுவேலுக்கு மனச்சோர்வு இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அவரது மனநிலையை ஒழுங்குபடுத்தும் சிகிச்சை திட்டத்துடன் சில மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஒரு வருட காலப்பகுதியில், தனது சிகிச்சைகளை சிறந்த முறையில் ஏறு வந்து அவர் நல்ல முறையில் முன்னேறியும் வந்தார். அதன் பிறகு அவர் விரும்பிய படிப்பான மாஸ் கம்யூனிகேஷன்ஸில் வெற்றிகரமாகச் சேர்ந்துள்ளார் இம்மானுவேல் இறுதியில் கடந்த 2013ல் தனது டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றார். ஆனால் அவர் தனது பட்டப்படிப்பை படிக்கச் சென்றபோது, இம்மானுவேல் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளார். கல்வி மற்றும் சமூக அழுத்தங்களின் வாயிலாக அவர் நிலை முன்பைவிட மோசமானது.
அதிலிருந்து தன்னைத்தானே தனிப்படுத்திக்கொள்ள துவங்கினான் என் மகன், நான் எதாவது பேசச்சென்றால் பொருட்டாக்களை போட்டு உடைப்பான். தீடீரென்று காலையில் எழுத்து “மா.. நான் ஏன் இப்போ எந்திரிச்சேன்… நான் கண்விழிக்காமலே இருந்திருக்கலாம்” என்றெல்லாம் என் பிள்ளை கூறும்போது என் உடலே நடுங்கும். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமானது. 2015ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னால் மறக்கவே முடியாத ஒரு நாள். நான் வழக்கம்போல காலையில் எழுத்து அலுவலகம் சென்றேன். ஆனால் வீடு திரும்பும்போது என் மகன் என்னை காண வரவில்லை. அவன் அறையில் என் குழந்தை தூக்கில் தொங்கியதை கண்டேன். எந்த ஒரு தாயும் காணக்கூடாத காட்சி அது என்று தேம்பி தேம்பி அழத்துவங்கினர்.
இரண்டு வாரங்கள் எனக்கு தேவைப்பட்டது நான் இயல்பு நிலைக்கு திரும்ப, இயல்பு நிலை என்ற ஒன்று எனக்கு இனி ஏது. “அம்மா, நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நகர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இங்குள்ள குழந்தைகளுக்கு உதவியாக நீங்கள் செய்து கொண்டிருப்பதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” எது தான் என் மகன் எனக்கு அவன் மரணத்தின் முன் இறுதியாக எழுதிய கடிதம்.
இன்றளவும் விக்கினேஸ்வரி சிங்கப்பூர் அரசுடன் இணைந்து பல கவுன்சிலிங் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். குறிப்பாக இளம் வயதினரிடையே உள்ள ஒரு வித மன அழுத்தத்தை போக்க தன்னால் இயன்ற அனைத்தையும் அவர் செய்து வருகின்றார். தனி youtube சேனல் ஒன்றின் மூலம் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பல தேவையான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றார். உள்ளூர் சமூகத்திற்கு அப்பால், விக்கினேஸ்வரி இலங்கை மற்றும் மலேசியாவில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தன்னார்வப் பணிகளையும் செய்து வருகின்றார். “சமூகத்திற்கு ஏதாவது ஒன்றைத் திரும்பக் கொடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்” என்று பணிவுடன் கூறினார் அந்த சர்வசாதாரணமாக காட்சியளிக்கும் அந்த பெண்மணி.