TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு UPI ட்ரான்ஷாக்ஷன் மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் புதிய அப்டேட்!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்கள் முந்தைய காலங்களில் சிரமப்பட்டு செய்த பல விஷயங்கள் இந்த தலைமுறைகளுக்கு எளிதாக கிடைத்தன. அதில் முக்கியமான ஒன்று பண பரிவர்த்தனை. வங்கிக்கு சென்று பணம் போட வேண்டும் என்றால் அதிகாலை வேகமாக எழுந்திருத்து வங்கி திறக்கும் 10 மணிக்கு முன்பே வரிசையில் நிற்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு நம் வீடுகளில் இருப்பவர்கள் செல்வதை நாமே பார்த்திருப்போம்.

மேலும் பணத்தினை கொண்டு செல்வதற்கு பாதுகாப்பாக பல்வேறு பணிகளில் சுருட்டி பத்திரமாக உடலுக்குள் ஒளித்து பணத்தினை வங்கியில் போட்டால் தான் மனம் நிம்மதி அடையும்.அப்பேற்பட்ட பெரும் சிரமத்தில் இருந்து, மக்களை வெளியில் கொண்டு வந்தது யுபிஐ (UPI) பண பரிவர்த்தனை. நாம் எங்கு சென்றாலும் பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலையினை மாற்றி ஒரு செல்போன் இருந்தால் போதும் எங்கும் தைரியமாக செல்லலாம் என்ற நிலைக்கு கொண்டு வந்ததே இதன் வெற்றி.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆப்களில் வருடத்திற்கு வருடம் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை அரசு புகுத்தி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், பூட்டான் இலங்கை, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் யூபிஐ பேமென்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்பொழுது புதிதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தற்பொழுது யு பி ஐ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாய்ஸ் பாட் எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குரல் மொழி மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அமேசான் அலெக்சா தொழில்நுட்பம் போன்றே குறள் அமைப்பினை யு பி ஐ பரிவர்த்தனையில் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த வசதி செயலுக்கு வரும் பட்சத்தில் நாம் நம் குரலை பயன்படுத்தியே எளிதாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் யுபிஐ பண பரிவர்த்தனையில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும்.

Related posts