TamilSaaga

“சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு” – அமைச்சர் Josephine Teo தகவல்

சிங்கப்பூரின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ வெளியிட்ட முகநூல் பதிவில் சிங்கப்பூரில் தகவல் தொடர்பு துறையில் சுமார் 16,000 பேருக்கு வேலை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதவள அமைச்சகம் மற்றும் LinkedIn நிறுவனத்துடன் இணைத்து நடந்த இணைய வழி காணொளியில் இந்த தகவலை அமைச்சர் ஜோசஃபின் தெரிவித்தார்.

சென்ற மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட SG United என்கின்ற வேலைத்திறன் திட்டத்தின்கீழ் இந்த வேலைகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டினை பார்க்கிலும் இந்த ஆண்டு சுமார் 7 ஆயிரத்து 500 க்கும் அதிகமான உள்ளூர்வாசிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இருப்பினும் தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய துறைகளில் மட்டும் அல்லாமல் மின்னிலக்கம் உள்ளிட்ட துறைகளிலும் பணியாளர்களும் உள்ளூர் வாசிகளும் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்று காலத்திலும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு உதவி வரும் மனிதவள அமைச்சகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Related posts