TamilSaaga

சரியான நேரத்தில் கச்சிதமான முடிவு.. சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சொன்னபடி இன்று (செப்.19) “செக்” வைத்த அரசு – இனி ஒரு ஊழியர் உயிர் போனாலும் நீங்களே பொறுப்பு!

சிங்கப்பூர்: மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று (செப். 19) பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஒரு நிறுவனத்தின பணியிட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களுக்கான நெறிமுறைகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் லெங், “2022 இல் இதுவரை 37 பணியிட இறப்புகள் நடந்துள்ளன, இது கடந்த 2021ம் ஆண்டு பதிவான ஒட்டுமொத்த பணியிட இறப்புகளின் எண்ணிக்கைக்கு சமம்.

இந்த விபத்துகளில் பெரும்பாலானவை பாதுகாப்பு குறைபாடுகள், போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காதது போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது.

இதற்கான மாற்றத்தை நாம் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தொடங்க வேண்டும். அதில் CEO’ஸ் மற்றும் இயக்குநர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தான் ஒரு நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவார்கள்.

எனவே, சமீபத்தில் சிங்கப்பூரில் அறிமுகம் செய்த Workplace Safety and Health Act (WSH) சட்டத்தின் படி, தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களுக்கு என சில முக்கிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க – வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களை கலங்க வைத்த ‘மல்லிப்பூ’ பாடல் – மனைவி, பிள்ளையை பார்க்க முடியாமல் தவிக்கும் ஒரு கணவனின் வேதனை!

முதலாவது கொள்கையின் படி, Workplace Safety and Health Act (WSH) அவரவர்களின் நிறுவனங்கள் அமல்படுத்தப்பட்டதையும், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களின் வேலைகள் மற்றும் பொறுப்புகளில் தெளிவு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது கொள்கையின் படி, ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் “தொடர்ந்து ஒரு வலுவான Workplace Safety and Health Act (WSH) கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். மிகவும் பயனுள்ள WSH தரநிலைகளை உள்வாங்கக் கூடிய தலைமைகளை நிர்ணயிக்க வேண்டும்.

புரியும்படி சொல்லவேண்டுமெனில், “சிங்கப்பூரில் உள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும், அதன் பணியிட பாதுகாப்பு மாற்று சுகாதார நெறிமுறைகளை சரியாக கையாள்வது போன்ற அனைத்திற்கும் அதன் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். இந்த விதி வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகளை, கோட்பாடுகளை மீறும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts