TamilSaaga

தடுப்பூசியால் 16 வயது நபர் மரணம்? : வதந்திகளை பரப்பாதீர் – சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்

இம்மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் தனது முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட 16 வயது நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தனது விசாரணையை தொடங்கியது. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கடந்த ஜூலை 3ம் தேதி Khoo Teck Puat மருத்துவமனையின் சுகாதார அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட அந்த வாலிபர் கடுமையான பளுதூக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது மயங்கி விழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி அந்த 16 வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் முழுவதும் பரவியது. இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து தெளிவான விளக்கத்தை தற்போது வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சகம்.

அந்த 16 வயது நபர் மரணிக்கவில்லை என்றும், மாறாக சிறந்த முறையில் உடல்நிலை தேறி வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts