TamilSaaga

ரோலக்ஸ் வாட்ச் வேணுமா? வாயை பிளக்க வைத்து அல்வா கொடுத்த சிங்கப்பூர் இளைஞர்… 19 கோடியுடன் சிங்கப்பூர் காவல்துறைக்கே தெரியாமல் எஸ்கேப்பான பலே கில்லாடி…

தமிழ்நாட்டில் நீங்க கேள்விப்பட்ட சில குற்ற சம்பவங்களே வித்தியாசமாக இருக்கும். அதை வைத்து சதுரங்க வேட்டை என ஒரு படம் கூட எடுக்கப்பட்டு இருந்தது. இதேப் போல மக்களின் ஆசையை தூண்டு பல கோடியை ஆட்டைய போட்டு நாடு விட்டு தப்பித்த இளைஞர் குறித்த சுவாரஸ்ய கதை இருக்கிறது.

சிங்கப்பூரில் 26வயதே ஆன இளைஞர் ஒருவர் கம்மி விலையில் விலையுயர்ந்த பொருளை கொடுப்பதாக கூறி ஏமாற்றி கோடிகளை சுருட்டிக்கொண்டு போலீசாருக்கு தண்ணிக்காட்டி விட்டு தப்பித்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரை சேர்ந்தவர் 26வயதான பை ஜியாபெங். ஒரு கடையில் வேலை செய்து வந்தவருக்கு பெரிய முதலாளியாகவே வேண்டும் என விருப்பம் உருவாகி இருக்கிறது. உடனே ஒரு நிறுவனத்தினை தொடங்கி அதை சிங்கப்பூர் சட்டத்தின் படி பதிவு செய்தும் விட்டார். இதை தொடர்ந்து தனது நிறுவனம் குறித்து பெரிய வகையில் விளம்பரம் செய்து இருக்கிறார்.

விலையுயர்ந்த பேக், வாட்ச் ஆகியவைகளை கம்மி விலையில் தருவதாக கூறி விளம்பரங்கள் செய்தார். தன் நிறுவனம் குறித்து ஆன்லைனில் நல்ல முறையில் Review எழுத வைத்து இருக்கிறார். உடனே அவர் கம்பெனி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உருவாகி இருக்கிறது.

தொடர்ச்சியாக அவரிடம் பொருளை வாங்க தொடங்கி இருக்கின்றனர். முதல் சில ஆர்டர்களை சரியாக டெலிவரி செய்து விடுகிறார். பிறகு தன் கம்பெனியில் சொந்த பயன்பாட்டுக்கும், வியாபாரம் செய்வதற்கும் பொருளை வாங்கலாம் என மீண்டும் விளம்பரம் செய்கிறார். அதுகுறித்து விசாரிக்க வந்தவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து தொழில் குறித்து விளக்கி இருக்கிறார்.

தாங்களும் பெரிய பணக்காரர்களாக விரும்பிய மக்கள் பலர் $2 லட்சம் முதல் $3 லட்சம் வரை அவரிடம் வியாபாரத்திற்கு கொடுக்கிறார்கள். ஆனால் அங்கு தான் அவர் தன் ஆட்டத்தை காட்டுகிறார். காசு கொடுத்தவர்களுக்கு ஒரு பொருள் கூட வரவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்படுகிறது.

காவல்துறை தரப்பில் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. கண்டெய்னர் லாரி வரவில்லை. அதனால் தான் என்னால் பொருளை கொடுக்க முடியவில்லை எனக் கூறி இருக்கிறார். அவர் ஏமாற்றப்பட்ட தொகை மட்டுமே $3.2 மில்லியனாக கூறப்படுகிறது. அதாவது 19 கோடி ரூபாயாக இந்திய மதிப்பில் கணக்கிடப்படுகிறது. இருந்தும் அவர் விசாரணைக்கு கைதான அடுத்த நாளே ரிலீஸ் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. எங்கையும் போக கூடாது என கண்டிப்பாக கூறப்பட்டது. அவர் தன் மனைவி 27 வயதான தாய்லாந்து பெண் பன்சுக் சிரிவிபாவுடன் முறையாகவே பதில் அளித்து வந்திருக்கிறார்.

ஆனால் அடுத்த சில தினங்களில் அவர்கள் இருவரையுமே காணவில்லையாம். வீட்டில் கூட யாருமே இல்லாமல் போனதை தொடர்ந்து விசாரித்ததில் கண்டெய்னர் லாரி மூலம் நாட்டை விட்டே தப்பித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர் மீது இண்டர்போலிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் இருவரையும் கைது செய்யவும் கூறினார்கள். ஆனால் இன்று வரை யார் கண்ணிலும் மாட்டாமல் வாழ்ந்து வருகிறார். 26வயதில் இத்தனை பெரிய தொகையை ஆட்டைய போட்டு இப்போ எங்க சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறாரோ!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts