TamilSaaga

“அந்த” காரணத்துக்காகத் தான் போலீசாரை கடிச்சேன் : தாக்கப்பட்ட இரு சிங்கப்பூர் காவல் அதிகாரிகள் – சிறைக்குள் நடந்த அட்டூழியம்

சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னை தூங்கிக்கொண்டிருந்த நிலையில் எழுப்பியதற்காக துணை போலீஸ் அதிகாரிகள் மீது கோபமடைந்த ஒரு பெண், அவர்களில் இருவரைக் கடித்துள்ளார். மேலும் தன்னைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டபோது அதை எதிர்த்துள்ளார். 27 வயதான கிளாடிஸ் லீ வென் ஜிங், தனது காதலனுடன் தகராறு செய்த பின்னர், பொது இடத்தில் கத்தியை பயன்படுத்தியதற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிங்கப்பூர்.. கருணைக்கொலை செய்யப்படுகிறதா காட்டுபன்றிகள்? : உண்மையில் நாம் செய்யவேண்டியது என்ன?

இன்று வியாழன் (பிப்ரவரி 17), லிக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு பொது ஊழியரைத் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளும் மற்றும் பொது இடங்களில் ஒரு தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்தது மற்றும் மெத்தம்பேட்டமைன் (methamphetamine) உட்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவரும் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

முன்னதாக ஒரு வழக்கில் லீ கைது செய்யப்பட்டு மார்ச் 2021ல் உட்லண்ட்ஸ் காவல் பிரிவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் என்று நீதிமன்றம் தெரிவித்தது. சிறையில் இருந்த அந்த பெண் சம்பவத்தன்று இரவு 11.45 மணியளவில், துணை போலீஸ் அதிகாரிகள் தன்னை எழுப்பியதற்காக அவர்கள் மீது கோபம்கொண்டு, தனது அறையின் கதவை பலமுறை உதைத்து கூச்சலிட்டுள்ளார். மேலும் அதிகாரிகளில் ஒருவரை “நாய்” என்று அவதூறாக அழைத்துள்ளார் மற்றும் முகமூடி அணியச் சொன்னபோது அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் மற்றொரு அதிகாரி அந்த பெண்ணை கைவிலங்கிட முயன்றபோது, ​​​​லி அதிகாரியின் முகத்தில் அறைய முயன்றுள்ளார், இதனால் அவரது கண்ணாடிகள் மற்றும் முகக் கவசங்கள் கழன்று விழுந்தன.

சுமார் 10 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தின் போது, ​​லி இரண்டு அதிகாரிகளைக் கடித்து, அவர்களில் ஒருவரைக் கீறினார். இதில் முதல் பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் மற்றும் கீறல்கள் ஏற்பட்டன, இரண்டாவது போலீஸ் அதிகாரிக்கு ஒரு வெட்டு காயம் மற்றும் கடித்த அடையாளம் இருந்தது. இரண்டு அதிகாரிகளுக்கும் தலா இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. உடனைடியாக அவர் மீது இதற்கு இந்த வழக்கு தனியாக தொடரப்பட்டது.

“இரண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து” : மார்ச் 1 வரை தடை நீடிக்கும் – சேவை தடைபட காரணம் என்ன?

இந்த சம்பவத்திற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு குடியிருப்பாளர் ஒருவர் இந்த தண்டனை பெற்ற பெண்ணை கையில் கத்தியுடன் கண்டுள்ளார். உடனே அவர் காவல்துறைக்கு அழைப்பும் விடுத்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் தன்னை அணுகுவதைக் கண்டதும் லி ஆயுதத்தை தூக்கி ஏறிய, இருப்பினும் அந்த பெண் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். நவம்பர் 2020ல் லி மீண்டும் கைது செய்யப்பட்டபோது, ​​​​அவரது சிறுநீர் மாதிரிகளில் “Class A” கட்டுப்படுத்தப்பட்ட மருந்தான மெத்தாம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு அவர் அதே மருந்தை உட்கொண்டது கண்டறியப்பட்டதால் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts