TamilSaaga

NCID செவிலியருக்கு கொரோனா தொற்று.. தொடர்பில்லாமல் புதிதாய் 3 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் ஜீன்.23 நிலவரப்படி 13 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

National Centre for Infectious Diseases (NCID)-இல் கொரோனா நோயாளிகள் பிரிவில் செவிலியராக பணியாற்றிய 34 வயது பெண் செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் 64,399வது கொரோனா பாதிக்கப்பட்ட நபராவார். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பணியின் போது சுய பாதுகாப்பு கருவி (Self Protective Equipment), மாஸ்க், முகத்தில் அணியப்படும் ஷீல்டு, கண் கண்ணாடி மற்றும் கையுறை என அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜீன்.21 அன்றே சளி மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஜீன்.22 அன்று மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

பிறகு ART மற்றும் PCR பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவரை தவிற 3 புதிய கொரோனா தொற்றுகள் எந்தவித முந்தைய தொடர்புகளும் இல்லாத நிலையில் பரவியுள்ளது.

மூவரில் ஒருவர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 81 வயது மதிக்கத்தக்கவர். அவருக்கு இருமல் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் ஜீன்.21 அன்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கு மறுநாள் கோவிட் பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதியானது.

மற்றொருவர் 69 வயது நபர் அவர் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர். கோவிட் அறிகுறிகள் இருந்த காரணத்தால் கண்காணிப்பு பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related posts