TamilSaaga

சிங்கப்பூரில் பிரம்மாண்டமாய் ஜொலிக்கும் “SK Jewellery”.. ஜஸ்ட் டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. Bonus + Benefits உடன் நல்ல சம்பளம் – ஏஜெண்ட்டுக்கு 1 ரூபா கொடுக்கத் தேவையில்லை!

Indeed வேலை வாய்ப்பு தளத்தில் ஜஸ்ட் 8 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு நல்ல Job Offer-ஐ உங்களுக்கு இந்த செய்தி மூலம் தெரியப்படுத்துகிறோம்.

சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல SK Jewellery நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Logitics / Supply Chain பிரிவில் “Warehouse Manager” போஸ்ட்டுக்கு Vacancy அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சம்பளம் மாதம் $4,500 டாலர்கள் முதல் $6,300 டாலர்கள் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைக்கு தேவையான தகுதிகள்:

லாஜிஸ்டிக்ஸ் அல்லது சப்ளை செயின் மேனேஜ்மென்ட் அல்லது warehouse management-ல் டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஒரு துறையை நிர்வகித்தல் மற்றும் வழிநடத்துவதில் குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Warehouse செயல்பாடுகள், அமைப்பு, மற்றும் செயல்முறைகள் மேம்பாடுகள் மற்றும் தலைமைத்துவ திறன் ஆகியவற்றில் நல்ல அனுபவம் வேண்டும்.

சரக்கு மேலாண்மை, தளவாடங்கள், கிடங்கு மற்றும் எண்ட்-டு-எண்ட் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் செயல்பாடு பற்றிய வலுவான Knowledge இருக்க வேண்டும்.

நல்ல கம்யூனிகேஷன் மற்றும் தனிப்பட்ட திறன்கள்

MS Office-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வரும் மே 24ம் தேதியோடு இந்த வேலைக்கான Recruitment Process முடிந்துவிடும் என்பதால், முடிந்த அளவுக்கு விரைவாக இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமின்றி, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க SingPass அவசியம் என்பதால், சிங்கப்பூர் சிட்டிசன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் PR பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும், இதுபோன்று Job Portals-களில் வெளிநாட்டு ஊழியர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக பல வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts