TamilSaaga

வேலைக்காக சிங்கப்பூர் வரும் தமிழக இளைஞர்கள்… தங்கும் Dormitories எப்படி இருக்கும் தெரிஞ்சிக்கலாமா? இத படிங்க

சிங்கப்பூரில் வேலைக்காக வரும் இளைஞர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று தான் தங்குமிடம். எப்படி இருக்கும் செட்டாகும் என பல சந்தேகத்துடன் கிளம்ப இருந்தால் இதை படித்துவிடுங்கள். நிறைய சந்தேகங்களுக்கும் உடனே விடை கிடைத்துவிடும்.

ஒரே இடத்தில் 10 நபர்கள் வரை தங்கும் அறை தான் Dormitory என்று அழைக்கப்படுகிறது. SPass மற்றும் EPass ஊழியர்களை தவிர PCM முதல் வொர்க் பெர்மிட் ஊழியர்கள் அனைவருமே Dormitoryல் தங்கலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்காக தயாராகி கொண்டிருந்தால் Quota எப்படி கணக்கிடப்படும்… உங்க கம்பெனிக்கு எத்தனை வொர்க் பெர்மிட் இருக்கும்.. இதை கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள்

ஒரு கம்பெனிக்கு 70 வொர்க் பெர்மிட் ஊழியர்கள் இருந்தால் 1 SPass ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். இதனால் அத்தனை பேருக்கும் ரூம் எடுக்க பெரிய தொகை செலவாகும் என்பதால் தான் இப்படி ஒரு வழி பின்பற்றப்படுகிறது.

Dormitoryக்கு வாடகையாக $100 சிங்கப்பூர் டாலர்கள் வரை கேட்கப்படும். பெரும்பாலான வொர்க் பெர்மிட் ஊழியர்களுக்கு கம்பெனியே அதற்கான தொகையை கொடுத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dormitoryல் வெளியாட்கள் உள்ளே நுழைய கூடாது. Dormitory வாசலில் செக்குரிட்டி செக் எப்போதுமே இருக்கும். சில இடங்களில் சமைக்க முடியாது. ஆல்கஹால் போன்ற போதை வஸ்துக்களும் பயன்படுத்தக்கக் கூடாது.

அறையின் அளவினை பொறுத்து தான் தங்க வைக்க வேண்டும் என்பது MOMன் சமீபத்திய அறிவிப்பாகி இருக்கிறது. இதை அடிக்கடி சிங்கை மனித வளத்துறை செக் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts