சில தினங்களுக்கு சிங்கப்பூர் சூன் லீ சாலையில் உள்ள MWC எனப்படும் (Migrant Workers Centre recreation club) புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம், அதன் பொழுதுபோக்கு கிளப்பைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பலகைகளில் உள்ள எழுத்துப்பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம், சீனம், தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பதாதைகளில் “தொழிலாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உள்ளே சாப்பிட அனுமதி இல்லை என்பதை குறிப்பதாகும்”.
அதில் தமிழ் மற்றும் வங்காள மொழிகளில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் எழுத்துப்பிழையோடு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் eclinic என்ற நிறுவனம் வழங்கும் MWCare என்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயலி ஒன்று தனது தமிழ் வழி சேவைகளை எழுத்துப்பிழையோடு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியானது, தொழிலாளர்கள் அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் Appointment புக் செய்வது. மருத்துவர்களை காணொளி வழியாக சந்தித்து ஆலோசனை பெறுவது போன்ற பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
1000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதை பயன்படுத்தியும் வருகின்றனர், ஆங்கிலம், பெங்காலி, தமிழ், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய மொழிகளில் கிடைக்கும் இந்த செயலியில் தமிழ் மொழி எழுத்துப்பிழையோடு அளிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் அந்த நிறுவனம் இந்த செயலியில் உள்ள தவறுகளை நீக்கி தமிழ் மொழியை தவறின்றி வழங்க ஆவணம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.