TamilSaaga

“பெண் போலீசை தாக்க முயற்சி” : குற்றவாளியை Taser Gunஆல் சுட்ட சிங்கப்பூர் போலீஸ் – அடுத்து நடந்தது என்ன? Video

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைரலாக ஒரு வீடியோவில் “சிங்கப்பூர் காவல்துறையிடம் மல்லுக்கட்டி சவால் விடும் ஒரு நபரை Taser Gun பயன்படுத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த நபருக்கு ஏழு மாத சிறைத்தண்டனை நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) விதிக்கப்பட்டுள்ளது. 42 வயதான Wong Yew Tien, தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காகவும், பொது ஊழியர்களை அவர்களின் கடமைகளில் இருந்து தடுக்க குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தியதற்காகவும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் “பிரியா” என்ற பெயரில் வாட்ஸ் அப் மோசடி.. பெண் சபலத்தால் மானத்தை இழந்த நபர் – கம்பி எண்ணும் இரு தமிழ் ஊழியர்கள்

போலீசாரை அந்த குற்றவாளி தாக்கிய காட்சிகள் (Video Curtesy TODAY)

பொது வெளியில் மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தியதும் மூன்றாவது குற்றச்சாட்டாக அவரது தண்டனையில் பரிசீலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி மதியம் 1.35 மணியளவில் பிளாக் 802, பிரெஞ்சு சாலையில் உள்ள LEFA டி கஃபேவில் தண்டனை பெற்றவர் வோங் தரையில் விழுந்து கிடந்ததாக நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது மற்றும் காபி ஷாப்க்கு துணை மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவரை மருத்துவர்கள் சோதிக்க துவங்கியபோது அவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் சத்தமாக கத்தவும், நாற்காலிகளை சுற்றி எறிந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

அந்த துணை மருத்துவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் அவர்கள் போலீசாரை அழைத்தனர். போலீசார் வந்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசாருடன் மல்லுக்கட்டிய அவர் அவர்களை சண்டைக்கும் அழைத்தார். இருப்பினும் அமைதியாக இருக்கும்படி வோங் பலமுறை போலீசாரால் எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு பெண் போலீஸ் மீது தாக்குதலை நடத்த அவர் பின்வாங்கினர். இறுதியில் வோங் ஒரு ஆண் அதிகாரியை பலமுறை “அடித்து”, அவரது முன்கையில் காயம் ஏற்படுத்திய நிலையில் Taser Gun கொண்டு அவரை சுட்டனர்.

இதையும் படியுங்கள் : பிப்ரவரி 1, முழுமையாக தடுப்பூசி போடலான “நீங்க” கார் ஓட்ட முடியாது – செக் வைத்த சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகம்

காயமடைந்த அந்த போலீசாருக்கு விடுப்பு வழங்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதாகி தற்போது தண்டனை பெற்றுள்ள வோங்கிற்கு 1994ம் ஆண்டு முதல் திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளார். மேலும் கடந்த 2000ம் ஆண்டில் ஆறரை ஆண்டுகள் சிறையும் எட்டு பிரம்பு அடிகளும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts