TamilSaaga

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு இன்று முதல் அமலாகிறது

27 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு துவங்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 27 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க இன்று முதல் அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி ஆனால் அர்ச்சனை குடமுழுக்கு மற்றும் திருவிழாவிற்கு அனுமதியில்லை, வணிக வளாகங்கள் திறக்க அனுமதி, உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என நிறுவனங்களுக்கு அனுமதி.

27 மாவட்டங்களில் செயல்படும் தனியார், அரசு வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பதிவு தேவையில்லை. இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

27 மாவட்டங்களில் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி.

11 மாவட்டங்களில் உள்ள மக்கள் மட்டும் பிற மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக செல்ல இ-பதிவு பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related posts