TamilSaaga

‘குளிக்கட்டும்னு தூக்கிபோட்டேன்’ – நாயை கால்வாயில் வீசியவருக்கு 11,000 வெள்ளி அபராதம்

சிங்கப்பூரில் அப்பர் பியர்ஸ் என்ற இடத்தில் உள்ள நீர்த்தேக்க பூங்கா பகுதியில் ஒரு நாயை கால்வாய்க்குள் தூக்கி வீசிய முதியவருக்கு தற்போது 11 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது செல்லப்பிராணியை குளிக்க வைக்க அவ்வாறு தான் செய்ததாக அபராதம் விதிக்கப்பட்ட அந்த முதியவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் அந்த அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் சுமார் 40 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் நடமாட அனுமதி இல்லாத அந்தப் பகுதியில் செல்லப் பிராணிகளுடன் சேஓங் வாஹ் மெங் என்ற அந்த ஆடவர் சென்றுள்ளார்.

கழுத்தில் பட்டையில்லமல் அந்த பகுதியில் சில நாய்கள் சுற்றித்திரிந்துள்ளன. இந்நிலையில் ஒரு நாயை உயரத்திலிருந்து கால்வாய்க்குள் வீசியிருக்கிறார். மேலும் மூன்று நாய்களை அந்த கால்வாயில் நீந்த செய்திருக்கிறார்.

அவர் நாயை கால்வாய்க்குள் தூக்கி வீசிய காணொளியை காட்சிப்படுத்திய வழிப்போக்கர் ஒருவர் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 58 வயதான சேஓங் வாஹ் மெங் இவ்வாறு நடந்துகொள்வது இது முதல்முறை அல்ல என்று கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை வனப்பகுதிக்குள் நாயை அழைத்துச் சென்றதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts