சிங்கப்பூரில் ச்சும்மா காத்து வாங்க போன காதலர்களுக்கு, உண்மையான காதல் என்றால் என்ன புரிய வைத்துள்ளார் 74 வயது முதியவர் ஒருவர்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Queen Lexinda Royupa. வயது 27. இவர் தனது கணவருடன் கடந்த செப்.13ம் தேதி காலை Changi கடற்கரைக்கு சென்றுள்ளனர். ஜஸ்ட் ரிலாக்ஸுக்காக இவர்கள் அங்கு சென்றனர்.
அப்போது, 74 வயது முதியவர் ஒருவர், 10 வருடங்களுக்கு முன்பு இறந்த தனது மனைவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,சாங்கி கடற்கரைக்கு வந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தடுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதில், அவரது தலை பாறையின் மீது பலமாக மோதியது.
Lexinda Royupaவும் அவரது கணவரும் அந்த இடத்தில் இருந்ததால், இருவரும் துரிதமாக செய்லபட்டு அந்த முதியவரை தண்ணீரில் இருந்து மீட்டனர். இவர்கள் இல்லையெனில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பார்.
தண்ணீரில் விழுந்து பாதையில் மோதிய அந்த முதியவருக்கு தலை மட்டுமின்றி, கை, கால்களிலும் அடிப்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து மதர்ஷிப் செய்தி நிறுவனத்திடம் பேசிய Lexinda Royupa, “அந்த முதியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து, டாக்சியில் கொண்டுச் சென்று விடுகிறோம் என்று கூறினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
ஆபத்தான சறுக்கலான பாதையில் ஏன் இவ்வளவு வேகமாக சென்றீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர், ’10 வருடங்களுக்கு முன்பு இறந்த தனது மனைவிக்கு ரோஜாப்பூக்கள் வைக்க சென்றேன்” என்றார்.
பிறகு அவர் அந்த தண்ணீரை பார்த்து, இங்கு தான் மனைவி இருக்கிறார். அதோ தெரிகிறார் பாருங்கள் என்று சொன்னபோது, எங்கள் கண்கள் குளமானது.
அவர் தனது மனைவி மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். அவ்வளவு இரத்தம் வடியும் போதும் எங்களைப் பார்த்து, ‘நீங்களும் தண்ணீரில் ரோஜா பூக்களை வீசுங்கள். என் மனைவி மகிழ்வாள் என்று கூறிய போது, உண்மையில் நான் உடைந்து அழுதுவிட்டேன்.
உண்மையான காதல் என்றால் என்னவென்று எனக்கு அவர் புரியவைத்துவிட்டார்” என்று Lexinda Royupa நெகிழ்ச்சியுடன் கூறினார்.