TamilSaaga

இன்று உலக புலிகள் தினம் – நமது சிங்கப்பூரில் புலிகளின் வாழ்க்கை பற்றி ஒரு பார்வை

உலக அளவில் இன்று புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள புலிகளை குறித்து இந்த பதிவில் காணலாம். சிங்கப்பூரில் கடந்த 1930 ஆம் ஆண்டில் சோவா சூ காங்கில் கடைசி மலாயன் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து இங்கு புலிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வருகின்றது. விலங்கியல் பூங்காக்களை தவிர சிங்கப்பூரில் தற்போது வேறெங்கும் புலிகள் இல்லையென்றே கூறலாம். இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் கடந்த டிசம்பரில் நைட் சஃபாரியில் இரட்டை மலாயன் புலிகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருபது ஆண்டுகளில் இனப்பெருகத்தின் மூலம் பிறந்த முதல் இரட்டை புலிக்குட்டிகள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 60 ஆண்டுகளில், இந்த வேட்டை விலங்குகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்காக வேட்டையாடுவதன் மூலம் பெரிய அளவில் அழிந்து வருகின்றன. ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் செய்தி நிறுவனம் WRS நிறுவனத்தில் பணியாற்றும் திரு. ஆனந்த் குமாரிடம் இதுகுறித்து பேசியபோது, புலிகளின் இனப்பெருக்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.

1994 மற்றும் 1998ம் ஆண்டுக்கு இடையில் WRS-ன் பூங்காக்களில் 24 மலாயன் புலி குட்டிகள் வெற்றிகரமாக பிறந்திருந்தாலும், வளமான புலிகள் இல்லாதது பிறப்புகளின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என்றார் அவர். மரபணு வேறுபாட்டை உறுதி செய்வதற்காக மலாயன் புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் ஜோடிகளை விலங்கியல் நிறுவனங்கள் கவனமாக நிர்வகிக்கின்றன. இது உறவினர்களிடையே இனப்பெருக்கம் அல்லது இனச்சேர்க்கை ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts